உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

91

காரிகத் தாழ்பொழிற் கண்ணார் சிராமலைக் காமர்கொன்றைத் தாரிகத் தாழ்சடைச் சங்கரனே சதிரொப்பனகொ பாரிகத் தாழுநின் பாதம் பணிந்தவ ரேதமஞ்ச வோரிகத் தாவருங் கானகத் தாடி யுரைகின்றதே.

28

உறைவாய் சிராமலை யுள்ளுமென் சிந்தை யுள்ளுமென்றும் பிறைவாயய் மழுவாட் பெரியவனே நுன் பியற்கணிந்த கறைவா யரவங் கடியா வகையடியே னறியே ன்றைவா யழலுமிழும் புரிந்தாடி யலமருமே.

29

அலமரு நெஞ்சத் தரிவைகண் டாற்றுங்கொல் போற்றலர்தங் குலமரு முப்புரங் கொன்றவன் கோலச் சிராமலைசூழ் நிலமரு தென்றுளி நித்திலங் கோப்ப நெடும்பொழில்கள் சலமரு வெள்வடம் பூணத்தண் கானெடுந் தாழ்பனியே.

பனிப்படம் போர்த்தனள் பார்மகள்

யானும் பசலையென்னுந்

துனிப்படம் போர்த்திங்குத் தேனங்குத்

தாரன்பர் துங்கக்கைம்மா முனிப்படம் போர்த்தபிரான் சிராப்

பள்ளியு மூரிக்கொண்மூத்

தனிப்படம் போர்க்கும் பருவமன்றோ

வந்து சந்தித்ததே.

30

31

வந்து சந்தித்திலர் காதலர் பேதையை வாதைசெய்வா

னந்திசந்திப்ப வெழுந்த தரன்றன் சிராமலைவாய்க்

கொந்து சந்தித்த செங்காந்தண் முகைகொண்டு கொண்டிடுவான் மந்தி சந்திப்ப வரவென் றுள்வாடு மதிப்பகையே.

32

மதியும்பகை முன்னைவாயும் பகை மனையும் மனைசூழ் பதியும் பகை பகையன்றில் என்றும் பகை பான்மைதந்த விதியும் பகையெனிலும் மன்ப ரன்பினர் வெள்ளக்கங்கை பொதியுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே. குழனெறி கட்டிய கொம்பனையா ரொடுங் கொண்டசுற்ற மழனெறி காட்டு மிடத்தெனக்குத் தனக் கன்பர் சென்ற பழனெறி காட்டும் பரன் சிராப்பள்ளி பரவக் கற்றேன்

33

முழுநெறி யாகிலுஞ் செல்லே னினிச்செல்வர் முன்கடைக்கே. 34