உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கூறப்படுகிறது. (No. 372. S. I. I. Vol. IV.) திருப்பரங்குன்றத்து உமையாண்டான் கோவில் என்னும் குகைக்கோவிலில் உள்ள சாசனம் இச்செய்தியைக் கூறுகிறது. அப்பகுதி வருமாறு :

66

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியும் நீலமும் நின்று கவினிழப்ப வாவியு மாறு மணி நீர் நலனழித்துக் கூடமு மாமதிளுங் கோபுரமு மாடரங்கு மாடமு மாளிகையு மண்டபமும் பலவிடித்துத் தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர் அழுத கண்ணீ ராறு பரப்பிக் கழுதை கொண் டுழுது கவடி வித்திச் செம்பி யனைச் சினமிரியப் பொருது சுரம்புக வோட்டி

இவ்வாறு மாளிகையும் மண்டபமும் பல இடிக்கப்பட்ட போது, பட்டினப்பாலைப் பதினாறுகால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டான், அது புலவரின் நினைவுக்குரி யாகலின்.

சுவரன் மாறன்

இடம் : தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள செந்தலை. இவ்வூர் சுந்தரேசுவரர் கோவிலின் முன்புறமுள்ள மண்டபத்தின் நான்கு தூண்களில் உள்ளவை.

பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி 13 : பக்கம் 134 - 149: "செந்தமிழ்" ஆறாந் தொகுதி : பக்கம் 6 - 18. (I. S. I. A. Vol. II. P. 1-21. Epigraphia Indica Vol. XIII. PP. 134 - 149.)

விளக்கம் : சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயர் சுருங்கிச் செந்தலை என்று வழங்குகிறது. செந்தலைக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள நியமம் என்னும் கிராமத்தில் உள்ள பிடாரிகோவில் மண்டபத்தில் இந்தத் தூண்கள் ஆதியில் இருந்தன. பிற்காலத்தில், இந்தப் பிடாரிகோவில் இடிந்துபோன பிறகு, அங்கிருந்த இத் தூண்களைச் செந்தலைக்குக் கொண்டுவந்து இந்த மண்டபங்கட்ட உபயோகித்துக்கொண்டார்கள். மண்டபங் கட்டும் போது இந்தத்

தூண்களின்

மேல்பகுதிகளைச் சிறிது குறைத்துவிட்டார்கள். குறைந்தபோது அதில் இருந்த எழுத்துக்களில் சில வரிகள் அழிந்து விட்டன. ஆகவே, செய்யுள்கள் முழுவதும் கிடைக்காமல் முதலிலும் கடையிலும் அழிந்து காணப்படுகின்றன.