உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

குறிப்பு இதே இடத்தில் உள்ள 1027 எண்ணுள்ள சாசனமும் தமிழ்ச் செய்யுளே. இதில், இடையிடையே எழுத்துக்கள் மறைந்து விட்டபடியால் அச்செய்யுளை இங்குத்தரவில்லை.

பஞ்சநதி முடிகொண்டான்

இடம் : அந்திர தேசத்துக் கோதாவரி மாவட்டம், இராமச்சந்திர புரம் தாலுகா. திராட்சாராமம், பீமேசுவரர் கோவிலில் உள்ள சாசனம்.

T

பதிப்பு: தென் இந்திய சாசனங்கள் : தொகுதி நான்கு, எண் 1338. (No. 1338. S. I. I. Vol. IV. )

விளக்கம் : திராட்சாராமம் என்னும் ஊர் தமிழில் இடர்க் கரம்பை என்று கூறப்படுகிறது. பீமேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்குத் தானம் செய்வதை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

புயல்மேவு பொழிற்றஞ்சை முதல்பஞ்ச நதிவாணன் புதல்வன் பூண்ட வயல்மேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல் வத்தர் வேந்தன்

இயல்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டில் இடர்க் கரம்பைச் செயல்மேவு மீசர்க்குத் திருநந்தா

விளக்கொன்று திருத்தி னானே.

குறிப்பு :- முடிகொண்டான் - பஞ்சநதி முடிகொண்டான். வத்தர் வேந்தன் வத்தராசன். இவனுடைய முழுப்பெயர், “திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சாதவன். பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன் என்று சாசனத்தில் காணப்படுகின்றது. இவன் சோழ அரசனின் உத்தியோகஸ்தன். இடர்க்கரம்பை ஈசர் - இடர்க்கரம்பையில் கோவில் கொண்டுள்ள பீமேசுவரர்.