உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

147

900 வரையில் அரசாண்டான். இவனைப் பராந்தக மகாராசன், மகரகேதனன், கோச்சடையன், ஸ்ரீநிகேதனன் என்று இச் சாசனம் கூறுகிறது.

5

10

15

20

சாசனச் செய்யுள்

ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழு மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்காப்ப விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின் றண்ணிழற்கீழ் ஸஹஸ்பரண மணிகிரணம்விளக்கிமைப்ப புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப் பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப் பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச் சோதிமர கத்துளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு

சடைமுடிஓ

டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின சதுர்ப்புஜன்சதுர் வ்வக்த்ரந் சதுர்வ்வேதிசதுர்த்வயாக்ஷந் மதுக்கமழ் மலர்க் கமல யோனி மனந்தந்த மாமுனிஅத்ரி அருமரவிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணி லிருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணந்

வெளிப்பட்டனன்

மற்றவற்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்கு கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்தி பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின் பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலுவியசெழு மகரக்குலம் விசைஓடுவின் மீன்னொடு மிக்கெழுந்த கடற்றிரைகள்