உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

இணைப்பு :

பராந்தகன் வீரநாராயணன்

இடம் : திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்த செப்பேட்டுச்

சாசனம்.

பதிப்பு : இந்தச் செப்பேட்டுச் சாசனம் இதற்கு முன்பு வெளியிடப் படவில்லை. முதல் தடவையாக இப்போது வெளியிடப்படுகிறது. இந்தச் சாசனத்தை அன்புகூர்ந்து கொடுத்தருளியவர், அண்ணாமலைப் பல்கலைகழகத்துத் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும், சாசன ஆராய்ச்சிப் பேரறிஞருமாகிய உயர்திரு. T. V. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்.

விளக்கம் : இந்தச் செப்பேட்டுச் சாசனம் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. முழுவதும் செய்யுளால் ஆனது. வட்டெழுத்தினால் எழுதப்பட்டது. சடையவர்மன் பாண்டியன் பராந்தகன் வீரநாராயணன் என்னும் பாண்டியனின் ஆட்சியில் ஆறாவது ஆண்டில் எழுதப்பட்டது.

களபரரை வென்று பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவிய பாண்டியன் கடுங்கோன், காடக சோமயாஜி என்பவருக்குச் சோமாசி குறிச்சி என்னும் ஊரை யாகபோகமாகக் கொடுத்தான். அவன் வழங்கிய செப்பேடு காடக சோமாஜியின் பரம்பரையார் வசம் இருந்தது. அது பிற்காலத்தில் காணாற்போக, அப் பரம்பரையில் வந்த நாராயணன் கேசவன் என்பவர் மேற்படி சோமாசிகுறிச்சிக்கு எல்லை குறிப்பிட்டுப் புதிய செப்பேடு எழுதித்தரவேண்டுமென்று ஸ்ரீ பராந்தக மகாராசனைக் கேட்டுக்கொள்ள, அவ்வரசன் சோமாசிகுறிச்சிக்கு மதுரகரநல்லூரெனப் பெயர் சூட்டி இச் செப்பேட்டுச் சாசனத்தை அளித்தான்.

இந்தச் சாசனம், பிற்காலத்துப் பாண்டியர் பரம்பரையைக் கூறுகிறது. கோச்சடையன் என்னும் ஸ்ரீ வரகுண மகாராசன் (முதலாம் வரகுணன்). அவன் மகன் ஸ்ரீவல்லபன், அவன் மகன் வரகுண பாண்டியன் (இரண்டாம் வரகுணன்) ஆகியவர்களைக் கூறுகிறது. இரண்டாம் வரகுண பாண்டியனின் மகன் இச்சாசனம் வழங்கிய பாண்டியன் பராந்தகன் வீரநாராயணன் ஆவன். இவன் கி.பி. 880 முதல்