உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவக்கரை*

தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் தாலுகாவில் திருவக்கரை என்னும் திருப்பதி இருக்கிறது. இங்குள்ள சிவன் கோவிலில் சந்திர சேகரேசுவரரும், வடிவாம்பிகை அம்மையும் எழுந்தருளியிருக்கின்றார்கள். திருஞான சம்பந்த மூர்த்திநாயனார், இக் கோயிற் சிவபெருமானைப் பாடியுள்ளனர்.

‘சந்திரசேகரனே! அருளாய்' என்று தண் விசும்பில் இந்திரனும்முதலா இமையோர்கள் தொழு திறைஞ்ச அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால் மந்தர மேரு வில்லா வளைத்தானிடம் வக்கரையே’ என்பது அத்திருப்பதிக்கத்தில் மூன்றாஞ் செய்யுள்.

திருவக்கரைத் திருக்கோயிலிலே பல கல்வெட்டெழுத்துக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டெழுத்துக்களிலிருந்து இந்தக் கோயிலைப் பற்றிய பழைய செய்திகளை அறிகிறோம். இந்தக் கல்வெட்டெடு எழுத்துக்களில் காலத்தினால் பழமையானது, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது. இவனுடைய 16-வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1000 1001). இந்தக் கோவில் கற்றளியாகக் கட்டப்பட்டது. கற்றாளியாகக் கட்டப்படுவதற்கு முன்பு இக் கோவில் செங்கற் கட்டடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோயிலைக் கற்றளியாகக் கட்டியவர், செம்பியன்மாதேவியார் என்னும் சோழ அரசியார்.

“ஸ்ரீகோராஜராஜ ராஜகேசரி பன்மற்கு யாண்டு 16-வது ஸ்ரீ கண்டராதித்த தேவர் தம்பிராட்டியார் ஸ்ரீஉத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் எடுப்பித்தருளின ஸ்ரீவக்கரைத் திருக்கற்றளிச் சிவலோகம் உடைய பரம சுவாமிகள்” என்று இந்தச்சாசனம் கூறுகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற நீண்ட சாசனம் முற்றுப் பெற வில்லை. நிலமும் பொன்னும் தானஞ் செய்து அவற்றின் வருவாயி *திருக்கோயில். மே, 1970.