உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

159

இராசேந்திர சோழனின் 21-ஆம் ஆண்டில் (கி.பி. 1052) இந்தக் கோவிலில், இணையன் ஆடவல்லானான பெரியன் என்பவர் 72 பலம் நிறையுள்ள வெண்கலத்தினால் செய்த ஒரு செயகண்டிகையை (சேமக்கலம்) தானம் செய்தார் என்று இன்னொரு சாசனம் கூறுகிறது.

(198)

முதலாங்குலோத்துங்க சோழனின் பத்தாம் ஆண்டுச் சாசனம் (கி.பி. 1079) 1079) ஒன்று, அழகிய சோழப் பல்லவரையனுடைய அகமுடையான் காமருடையான் திருவாலை பொன் என்பவர், இக்கோயிலுக்குச் சந்தி விளக்குக்காகப் பன்னிரண்டு ஆடுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (199) இந்த சோழனுடைய 29-ஆம் ஆண்டுச் சாசனம் (கி.பி 1098) இந்தக் கோவிலுக்குத் தேவரடியாரைத் தானம் செய்ததைக் கூறுகிறது.

66

'ஐயங்கொண்ட சோழ மண்டலத்து (தொண்டை மண்டலத்து) மாத்தூர் நாட்டுப் பந்திமங்கலத்துப் பரலிகை ஊர் இருக்கும். வேளாண் மாம்பாக்க முடையான் அமுதன்பள்ளி கொண்டானும், அமுதன் வேளானும், அமுதன் உய்ய வந்தானும் இவ்வனை வோங்கள் அடியாள் அங்காடியும், இவள் மகள் பேரங்காடியும், இவள் மக்களும் திருவக்கரையுடைய மாதேவற்குத் தேவரடியாராக ஸ்ரீஹஸ்தத்தே நீர்வார்த்துக் குடுத்தோம்” என்று இந்த சாசனம் கூறுகிறது. (204)

விக்கிரம சோழனுடைய மூன்றாம் ஆண்டு (கி.பி. 1120) சாசனம், ஓய்மா நாட்டு முந்நூற்றுக்குடிப்பள்ளி செங்கெணி அம்மையப்பன் பண்டி என்பவர் இக்கோயில் பெருமானுக்கு மந்திரபோனகம் நெய்யமுது கறியமுது அடைக்காயமுது தயிரமுது முதலியவற்றிற்கு நிவந்தம் செய்ததைக் கூறுகிறது. (201) இவருக்கு நரலோகவீரப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

திருவக்கரைச் சிவன் கோவிலில், எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலின் வாயிலில் இடதுபுறத்து வாயிலின் நிலையில் ஒரு செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அது கீர்வருமாறு :

ஸ்வஸ்திஸ்ரீ.

இசைவிளங்குடையன்மன் எங்கோனுக்கு

இருபத்து நாலாமாண்டு

குசைவிளங்கு மறையவர்கள் குழுமிய

வக்கரை மாலின் கோயில் சாலத்