உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

161

மூவாப்பசு 128. ரிஷபம் 4. ஒரு நந்தா விளக்கு 32 பசுக்கள் வீதம் 4. விளக்குகளுக்கு 128 பசுக்களைக்கொண்டு இந்த பசுக்களின் பாலிலிருந்து நெய்யும் அந்த நெய்யினால் விளக்கேற்ற வேண்டும் என்பது கட்டளை. 4 ரிஷபம் (காளை மாடு) தந்தது எதற்கென்றால், இவை “சாவா பசுக்கள்" ஆகையால் இப்பசுக்களின் எண்ணிக்கை குறையாமல் கன்றுகள் வளர்ச்சி எய்தி இருப்பதற்கு (215).

இந்த மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய 16-ஆம் ஆட்சியாண்டில் கண்டர் சூரியன் சம்புவராயன் இரண்டு விளக்குகளைத் தானஞ் செய்தான். சம்புவராயன் இக்கோவிலில் கோபுரத்தின் ஆயிரக்கால் மண்டபத்தையும் கட்டும் முன்னமே கூறினோம். குத்துவிளக்கு சாசனத்தின் வாசகம் இது :

66

"ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு உடையார் திருவக்கரை ஆளுடைய அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்ட கண்டர் சூரியன் செய்வித்து இட்ட நிலைகுத்து விளக்க 2- னால் இருப்பு நாள் உட்படத் தாரா எடை ஆயிரத்து நூற்றிபத்து இருபலம்.” (216. தெ. இ. க. தொகுதி 17).

மூன்றாம் விக்கிரம பாண்டியனுடைய நான்காம் ஆண்டில் (கி.பி. 1285) எழுதப்பட்ட சாசனம், இப்பாண்டியனுடைய அரசு கோவிலில் ஒரு மண்டபம் கட்டியதை கூறுகிறது. "பெருமாள் விக்கிரம பாண்டிய நம்பிராட்டியார் உலகமுழுதுடையார் வித்த திருமண்டபம் யாண்டு 4’

(21)

وو

இந்தப் பாண்டியனுடைய ஆறாவது ஆண்டில் (கி.பி. 1288) எழுதப்பட்ட சாசனம் இந்தப் பாண்டியன் இந்தக் கோவிலுக்கு தானங்கொடுத்ததைக் கூறுகிறது. இவன் பேரால் நித்தியபூசை, திருநாள்களை? தான். “நம்பேரால் கட்டின? பாண்டியன் சந்திக்கும் விக்கிரம பாண்டியன் திருநாளுக்கும் அமுதுபடி சாத்துபடி? வேண்டும் நித்த நைமித்தங்களுக்கும்? மத்து காணி" என்று இச்சாசனம் கூறுகிறது.

முதலாங் குலாத்துங்க சோழனுடைய 44-ஆம் ஆண்டுச் சாசனம் (கி.பி. 1113). இக்கோயிற் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் துர்க்கைக்கும் திருவிளக்காக (65) பொற்காசு தானம் செய்யப் பட்டதைக் கூறுகிறது. “இக்காசு அறுபத்தஞ்சுக்குத் திருவக்கரை