உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

171

ஏகம்பர் (ஏக+அம்பர்-ஒரே அம்பை உடையவர்) ஆகிய சிவ பெருமான் கையில், அம்பு (இரண்டு அம்பு) இல்லை; ஒரே அம்புதான் இருக்கிறது. அந்த ஒரு அம்பைக் கொண்டே அவர், முப்புரத்தை எறித்து அழித்து விட்டார். இந்தக் கருத்தை, இவ்வுருவத்தை அமைத்த சிற்பி வெகு நன்றாகக் காட்டியுள்ளார். சிவபெருமான் கையில் ஒரே ஒரு அம்பை மட்டும் காட்டியிருப்பது மாத்திரம் அன்று. அம்பறாத் தூணி இந்தச் சிற்பத்தில் காணப்பட வில்லை. வில்லைக் கொண்டு அம்பு எய்தியவர்களுக்குத் தோளில் அம்பாறத் தூணி அவசியம் இருக்கும். ஆனால், ஏகாம்பரராகி சிவபெருமானுக்கு அம்பறாத் தூணித் தேவையில்லை. ஏனென்றால் அவர் ஏக அம்பர்! இந்தக் கருத்தை வெகு நன்றாக விளக்கி யிருக்கிறார். இந்தச் சிற்ப உருவத்தைப் பார்க்கிறவர்களுக்கு இந்த நுட்பமான பார்வையும் வேண்டும். சாத்திரக் கருத்தைத் தெரிவிக்கத் தானே சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் இந்தச் சிற்ப உருவத்தை ஆராய்பவர், சிவபெரு மானுடைய மற்றொரு வலது கையில் மழுவும் சூலமும் காட்சி அளிக்கின்றன. (மழு கோடாரி). இந்த ஆயுதங்கள் பொதுவாகச் சிவபெருமானுடைய மூர்த்தங்கள் எல்லாவற்றிலும் காணப்படுவது வழக்கம். மழுவும் சூலமும் வெவ்வேறு தண்டுகளில் அமையாமல் இரண்டும் ஒரே தண்டில் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கே உரிய இந்த ஆயுதங்கள் இந்தச் சிற்பத்தில் அமையவில்லையானால், இந்த உருவத்தைக் கோதண்டராமன் உருவம் என்று கருத வேண்டி யிருக்கும்.

சிவபெருமானின் இடது காலின் பக்கமாக, தண்டாயுதம் போன்ற ரு ஆயுதம் தொடையின் மேல் சாய்ந்துகிடக்கிறது. இடது தொடையின் மேல் சாய்ந்து கிடக்கிற இந்த ஆயுதத்தையும், வில்லையும், சிவபெருமான் தம்முடைய மற்றொரு இடது கையினால் அணைத்துக் கொண்டிருக்கிறார். கனத்ததாகக் காணப்படுகிற இந்த ஆயுதத்தைக் காண்கிறவர் சிலர், இது தண்டாயுதம் என்றும், இதை வைத்துக் கொண்டிருக்கிற இந்த உருவம் துவார பாலகனின் உருவம் என்றும் கருதுவர். உண்மையில் தண்டாயுதம் அன்று. கட்டங்கம் அல்லது கட்டுவாங்கம் என்னும் ஆயுதம் இது. கட்டுவாங்கம் என்பது ஒரு கோயிலின் தலைப்பில் முழுமையான மண்டையோட்டைக் கட்டி