உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

திலகவதிதாயாரைப் போல எல்லோரும் இந்தத் திருத் தொண்டினை இலவசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. திருமெழுக்கிடும் திருத்தொண்டினைச் செய்வதற்கென்று கோவில் களில் நிபந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதற்குத் திருமெழுக்குப் புறம் என்பது பெயர். திருமெழுக்குத் தொண்டினைச் செய்கிறவர் களுக்குக் காசுகொடுக்காமல் அதற்குப் பதிலாப நெல் கொடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்பொருட்டு நிலங்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. அந்த நிலங்களில் விளையும் நெல்லைத் திருமெழுக்கிடு வோருக்குக் கொடுப்பது வழக்கம். இந்தச் செய்தியைச் சாசனங் களிலிருந்து அறிகிறோம். அந்தச் சாசனங்கள் சிவவற்றைக் காட்டுவோம்.

6

தஞ்சாவூர் மாவட்டம், மாயூரம் தாலுகா, குற்றாலம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் சாசனம். இந்தக் கோயிலுக்குச் சொன்ன வாறறிவார் கோயில் என்பது பழையப் பெயர். இப்போது, உத்த வேதீஸ்வரர் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. உத்தம சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியார் என்னும் அரசியார் இந்தக் கோவிலுக்குப் பல கட்டளைகளை அமைந்திருக்கிறார். அக்கட்டளை களில் ஒன்று திருமெழுக்குப்புறம். "திருமுற்றம் திருவலகிட்டுத் திருமெழுக்கிடுவார் மூவர்க்கு நிசதம் நெல்லுக் குறுணி நானாழியாக ஓரட்டைக்கு நெல்லு நாற்பத்தைங் கலத்துக்கு நிலன் காலே அரைமா அரைக்காணி" (1) என்று இந்தச் சாசனச் செய்யுள் கூறுகிறது. பெயர் திருக்கற்றளி மகாதேவர் கோயில் என்பது. இப்போதைய பெயர் உத்வாக நாத சுவாமி கோயில் என்பது. இந்தக் கோவிலுக்கும் செம்பியன் மாதேவியார் நிபந்தங்களைச் செய்திருக்கிறார் என்பதை இங்குள்ள சாசனம் கூறுகிறது. இங்குக் கோயிலில் திருமெழுக்கிடுவார் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருக்கோடிகா. இவ்வூர் இப்போது திருக்கோடிகாவல் என்று கூறப்படுகிறது. திருக் கோடிகாவுக்குக் கண்ணமங்கலம் என்னும் பெயரும் இருந்தது என்று சாசனத்திலிருந்து தெரிகிறது. இவ்வூரிலுள்ள திருக்கோடிகா சாசனம். திருமெழுக்குப்புறமாக நிலம் தானம் செய்யப்பட்டிருந்ததைக் கூறுகிறது. இந்த நிலத்தின் எல்லையை இந்த சாசனம் இவ்வாறு கூறுகிறது.