உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மேற்படி பட்டனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதே சுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது 406 of 1925. இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடிகொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்று விட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரையனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்றுகளிலிருந்து இரத்தக் காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்று அறியக்கிடக்கிறது.