உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சாசனம் 29

29

259

1.

கோவிசைய நந்தி விக்கிரமவர்மற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரு

2. ம் பள்ளிஇல் வைத்த பொலியூட்டு நெல்முத லிரு நூற்று.

21-ஆம் ஆண்டு

30

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுகா, சென்னி வாய்க்கால், சிவன் கோயிலின் இடிந்த கோபுரத்துக்கு அருகில் உள்ள நடுகல் சாசனம்.

நந்திவர்மனின் 21-ஆம் ஆண்டு இடப்பட்டுள்ள இச் சாசனம், இங்கிருந்த மடத்தைச் சுட்டு அழித்தபோது, இம்மடத்தைச் சேர்ந்த சத்தியமுற்றத்தேவன் எதிர்த்தபோது அவன் கொல்லப்பட்டதைக் கூறுகிறது. இச்சாசனக் கல்லில், ஒரு ஆள் நெஞ்சில் அம்பு தைக்கப் பட்டிருப்பதுப் போல ஒரு உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இச்சாசனத்தில் பராந்தகபுரத்து அறிஞ்சிகை ஈஸ்வரம் கூறப்படுகிற படியால், நந்தி வர்மனுக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து வாழ்ந்திருந்த அறிஞ்சயன், அவன் தந்தை முதலாம் பராந்தச்சோழன் காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எழுத்தும் 10ஆம் நூற்றாண்டு எழுத்தாகத் தோன்றுகிறது. எனவே, இச்சாசனம் பழைய சாசனத்தைப் பார்த்துப் பிற்காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

ஸ்வஸ்திஸ்ரீதெள் ளாற்றெறிந்து ராஜ்யமுங்கொ

ண்ட நந்திப் போத்தரையர்க் கு யாண்டு இரு பத்தொன்றாவது

பராந்தகப் புரத் து அறிந்தி

கை ஈஸ்வரகிரு

31 சாசன வாசகம்3