உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

281

(சளுக்கியனை அதிராசமங்கலத்தில் வென்றவன், யதுவம்சகேது என்னும் சிறப்புப் பெயருள்ளவன், சோழன் மகளான அனுபமை என்பவளை மணந்தவன்)

6

8. பூதி விக்ரமகேசரி (பல்லவர் சேனையை வென்றவன். பாண்டியனை வென்று வஞ்சிவேளைக் கொன்றவன். கற்றளி, வரகுணை என்பவரை மணந்தவன். கற்றளி வயிற்றில் பிறந்தவர்) பராந்தக வர்மன், ஆதித்ய வர்மன்.

இந்த சாசனத்தை ஆராய்வோம். முதலில் 5-ஆவது எண்ணில் கூறப்பட்ட நிருபகேசரியை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பு இந்தச் சாசனத்தை ஆராய்ச்சி செய்த வெங்கையா, நீலகண்ட சாஸ்திரி, மீனாட்சி, ஹீராஸ் பாதிரியார், ஆரோக்கியசாமி முதலியவர்கள். நிருபகேசரியைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஏன் ஆராயாமல் விட்டார்களோ தெரியவில்லை. இவனைப்பற்றி நாம் ஆராய்வோம்.

நிருபகேசரி என்பது அரசர் சிங்கம் என்று பொருள் பெறும். இது, இவனுடைய சிறப்புப் பெயராக தெரிகிறது. இவன் இளமையில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று இந்தச் சாசனம் இவனைப்பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து என்ன? பாம்புகளோடு இருந்து மனிதன் வாழ முடியுமா? அது இயற்கையா? நிருபகேசரி, சிறுவயதில் பாம்புகளுடன் வளர்ந்தான் என்பதன் பொருள் என்ன?

பாம்பு என்றாலும் நாகம் என்றாலும் ஒன்றே. தென்னிந்தி யாவிலே நாகர் என்னும் ஓர் இனத்தார் இருந்தார்கள். அவர்களுக்குப் பாம்பு அல்லது நாகம் அடையாளச் சின்னம். பல்லவ அரசர்களில் ஒருவன், நாக அரசன் மகளை மணஞ்செய்து கொண்டு அரசுரிமை யைப் பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. விஜய நந்திவர்மனுடைய வேலூர்ப்பாளையத்துச் செப்புச் சாசனம், பல்லவ அரசர் வழியில் வந்த வீரகூர்ச்சன் என்பவன், நாக அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்டு நாகர் அரசுரிமைப் பெற்றான் என்று கூறுகிறது. நாகர் சம்பந்தம் பெற்றபடியினாலே, பல்லவருக்கு நாகர் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது.

3

மேலும் நாகக்குரிய பாம்புக்கொடியைப் பல்லவ அரசரும் கொண்டிருந்தார்கள். காஞ்சீபுரத்து வைகுண்ட பெருமாள் கோயிலைக்