உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

கொடும்பளூர் சாசனம் - தமிழாக்கம்

பாண்டியனுடைய யானைக் கூட்டத்தை வென்றவன்

279

1. இவன் வழியில், மழவரை வெற்றிகொண்ட புகழ்பெற்ற வீரதுங்கனான பிரவீரஜித்து இவனுக்கு மகனாகப் பிறந்தான். இவனுக்கு அதிவீர அநுபமன் என்பவன் பிறந்தான். இவனுக்குச் சங்ககிருத்து என்பவன் பிறந்தான். இவனுக்குப் பிறந்தவன், இளவயதிலே பாம்புகளோடு வளர்ந்து புகழ்பெற்ற நிருபகேசரி ஆவன். இவன் மகன் வாதாபியை வென்ற பரதுர்க்கமர்த்தனன் என்பவன்.

2.இவனுடைய மகன், திவ்விய புகழொளி பெற்றவனும், அதிராஜ மங்கலத்தில் சளுக்கியனை வென்ற (கொன்ற?)வனுமாகிய சமராபிராமன் என்பவன்.

3.இவன் மகன் யதுவம்வசத்தின் கொடிபோன்றவனான, தன் பெயருக்கேற்றபடி இணையற்றவனான அநுபமன் என்பவன். இவன் சோழ அரசன் மகளை மனைவியாகப் பெற்றவன். இவள், திருமாலின் மனைவி திருமகளைப் போன்றும், பிரமன் மனைவி கலைமகளைப் போன்றும், அரசனுடைய மனைவி மலைமகளைப் போன்றும் சிறப்பு வாய்ந்தவள்.

பூதி என்னும்

4.இவருக்குப் பிறந்தவன் புகழ்பெற்ற பெயருடைய மின்னாமலை என்பவன். இவன் போரிலே விக்ரமகேசரி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான்.

5.பல்லவர் சேனையின் இரத்தந் தோய்ந்தபடியினாலே, காவிரி ஆற்றின் நீர் செந்நிறமாயிற்று. மேலும் இந்த வீரன், போரிலே வீரபாண்டியனை வென்று வஞ்சிவேளைக் கொன்றான்.

6.பகைவராகிய யானைக் கூட்டத்தை வென்ற பிறகு விக்ரம கேசரி கொடும்பாளூர் நகரத்திலே வாழ்ந்திருந்தான்.

7. புலவர்களுக்குக் கற்பகத் தருவாகவும், அரசரின் கையாகிய தாமரைகளுக்குத் தண்மதியாகவும், மண்மகளுக்கு திருமகளுக்கும் நாமகளுக்கும் புகழ்மகளுக்கும் தலைவனாகவும் இருந்து இவன் அரசாண்ட போது, கூர்மையானது மகளிர் கண்களிலேயும், நிலையின்மையானது அவர்களின் இமையிலேயும், கருமையானது