உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கிறித்துவமும் தமிழும்

1. ஐரோப்பியர் வருகை

கிறித்துவராகிய ஐரோப்பியரின் தொடர்பினால் தமிழ் மொழிக்கு உண்டான வளர்ச்சியை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். அதனை ஆராயப் புகுவதற்கு முன் ஐரோப்பியரின் தொடர்பு எப்படி ஏற்பட்டதென்பதைத் தெரிவிப்பது முறையாகும். ஆகையால், ஐரோப்பியர் நமது தேசத்திற்கு வந்த வரலாற்றைச் சுருக்கமாக எழுதுவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல்நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர்' என்னும் ஐரோப்பியக் குலத்தார் சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்டகசாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்துவைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார் முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22-இல், மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ்சீசர்3 என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ரேபொ' என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ் வணிகத் தொடர்பு கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ்' என்பவர், இந்து மாகடலில் வீசுகிற வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றைக் கண்டுபிடித்தார். இப் பருவக்காற்று வீசுகிற காலங்களிற் பிரயாணம் செய்வதால், மாலுமிகள் விரைவாகக் கப்பல்களைச் செலுத்திக் குறிப்பிட்ட இடங்களுக்கு ஏறக்குறையக் குறிப்பிட்ட காலத்திற் செல்லக்கூடியதாயிருந்தது. ஆகவே, யவன வணிகர்கள் அதிகமாகத் தமிழ்நாட்டிற்கு வரத் தலைப்பட்டார்கள். இவ் வணிகப் பெருக்கத்தினால் நமது தேசத்தாருக்கு ஏராளமான வருவாய்