உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

தமிழ்மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி

அனைத்தும் பாதிரிமார்களால் உண்டானவையே. இல்லறத்தாராகிய ஐரோப்பிய உத்தியோகத்தர்களால் தமிழுக்கு யாதொன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நமது நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கிலேய அலுவலாளர் தங்கள் அலுவல் முறைக்கு உதவியாக இருப்பதற்காகவும், நமது நாட்டுக் கலையின் போக்கை அறிவதற்காகவும், “சென்னைக் கல்விச் சங்கம்”6 என்னும் ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாகத் தமிழைக் கற்று வந்தார்கள். இச் சங்கத்தினால் தமிழ்மொழிக்குச் சிறப்பாக யாதொரு வளர்ச்சியும் உண்டானதாகச் சொல்லமுடியாது. கிறித்தவர்களால் தமிழுக்கு ஏற்பட்ட அபிவிருத்தி எல்லாம் பாதிரிமாரைச் சேர்ந்ததே. பாதிரிமாரும் தமிழுக்காகச் செய்யவேண்டும் என்னும் கருத்துடன் செய்யவில்லை. தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்த முயற்சியின் பயனே தமிழிற்குச் சில நன்மைகளை அளித்தது. எவ்வாறாயினும், அந்த நன்மைகள் ஐரோப்பியப் பாதிரிமார்களால் உண்டானவையே. அவற்றை இனி ஆராய்வோம்.

னி

அடிக்குறிப்புகள்

1. உரோமர், கிரேக்கர்.

2. காவிரிப்பூம்பட்டினம்.

3. Augustus Caesar.

4. Strabo.

5. Hippalus.

6. Emanuel.

7. Milanda.

8. Calicuti.

9. Zamorian.

10. Pedro Alvarez Cabral.

11. Brazil.

12. Holland.

13. Sir Francis Drake.

14. Sir John Lancaster.

15. Danes.

16. The Madras College.