உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

கூடிய மாதத்தாள். இஃது இந்துக்கள், கிறித்துவர் என்னும் இருதிறத்தாருக்கும் பயன்படும்படி நடத்தப்பட்டு வந்தது.

அருணோதயம் இது 1863 முதல் லூத்தரன் மிஷன் சங்கத் தாரால் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலேயே சுவிசேஷ தூதிகை என்னும் தமிழ்த்தாள் நாகர்கோயிலிலிருந்து வெளிவந்தது.

தத்துவ போதினி : சென்னை வேத சமாஜம் என்னும் இந்துமதப் பிரசார சபையாரால் 1864இல் தொடங்கப்பட்டது. முதலில் மதசம்பந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. பிறகு, இலக்கியம், உலகச்செய்தி முதலியவை சம்பந்தமான கட்டுரைகள் எழுதப்பட்டன.

விவேக விளக்கம் : இந்துக்களால் 1895 முதல் நடைபெற்று வந்தது. இதில் மத சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்தன. பிரம்ம சமாஜத்தை ஆதரித்தும் வைதீகர்களைத் தாக்கியும் இதிற் கட்டுரைகள் வெளியிடப்

பட்டன.

அமிர்த வசனி: இந்துப் பெண்மக்களின் பொருட்டுச் சென்னையில் 1895 முதல் வெளிவந்த மாத வெளியீடு சித்திரப் படங்களோடு கூடியது.

கத்தோலிக் பாதுகாவலன் : இஃது இலங்கையிற் கத்தோலிக் கிறித்துவ மதத்திற்கு அத்தியட்சகராய் இருந்த டாக்டர் கிறிஸ்றோபர் பொன்ஜீன் என்பவரால் 1876-இல் தொடங்கப்பட்ட மாத இருமுறை வெளியீடு. இதில் தமிழ், ஆங்கிலம் என்னும் இரண்டு மொழிகளிற் கட்டுரைகள் எழுதப்பட்டன. 1877-இல் இலங்கை கத்தோலிக்க சபையார் இத் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்கள். 1878 முதல் இது கிழமைத்தாளாக மாற்றப்பட்டது. பிரான்ஸிஸ் தம்பு என்பவர் இத்தாளின் ஆசிரியராக 30 ஆண்டுகள் இருந்தார்.

சத்திய வேதக்கொடி : 1882-இல் தொடங்கப்பட்ட மாத வெளியீடு. தீர்க்க தரிசன வர்த்தமானி 1884-இல் தொடங்கப்பட்ட மூன்று மாதத்திற் கொருமுறை வெளியீடு. தீர்க்கதரிசன சுப்பிர தீபிகை 1889 முதல் வெளிவந்த மாத வெளியீடு.

கிறித்தவன் : இது 1890 முதல் வெளிவந்த மாதத் தாள். இத்தாள்கள் மாசிலாமணி என்பவரால் நாகர்கோயிலில் நடத்தப்பட்டது.