உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சில பழமொழிகள்

தமிழர் பேசும்போது இடை இடையே பழமொழிகளைக் கையாளுவதில் விருப்பமுடையவர். ஆயிரக்கணக்கான பழ மொழிகள் தமிழில் உண்டு. தமிழரின் வழக்கவொழுக்க நடை யுடைபாவனைகளைப் பற்றிய பழமொழிகள் ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் இருந்தனவும் இருக்கின்றனவுமான சமயங்களைப் பற்றியும், சாதிகளைப் பற்றியும் பழமொழிகளும் உண்டு. 'திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?', ‘சமணன் கைச் சீலைப் பேனைப் போல' என்பவை போன்ற பழமொழிகள் தமிழ்நாட்டில் சமண மதம் சிறந்தோங்கி யிருந்த காலத்தில் உண்டான பழமொழிகளாகும், 'டில்லிக்கு ராசாவானாலும் தல்லிக்குப் பிட்டா, 'மரியாதை கெட்டால் மாலவாடு', 'காது காது என்றால் நாதி நாதி என்கிறான்’ என்பன போன்றவை தமிழ்நாட்டில் வடுகர் தொடர்புண்டான பிறகு ஏற்பட்ட பழமொழிகள். 'காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்', “நவாப் அத்தனை ஏழை புலியத்தனை சாது’, ‘துலுக்கத் தெருவில் தேவாரம் ஓதினது போல’, ‘நிஜாமாலி தண்டிலே நிஜார்காரனைக் கண்டாயா?' என்பவை போன்ற பழமொழிகள் தமிழ்நாட்டில் முகம்மதியரின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் உண்டானவை. அது போலவே, ஐரோப்பியரும் கிறித்துவ மதமும் தமிழ்நாட்டில் வந்த பிறகு, ஐரோப்பியரைப் பற்றியும் கிறித்துவ மதம் பற்றியும் சில பழமொழிகள் தமிழில் வழங்கி வருகின்றன. அவை வருமாறு:-

1.

2.

3.

4.

உடுத்திக் கெட்டான் வெள்ளைக்காரன், உண்டு கெட்டான் சோனகன், புதைத்துக் கெட்டான் தமிழன்.

உன் சமர்த்திலே குண்டு பாயாது

ஊசியின் காதிலே ஒட்டகம் நுழையுமா?

எத்தனைதரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை

தின்னான்.