உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

“அறமெனப்பட்ட யாவு மன்னுயிர்க்கோ ருயிராகவும் மனத்திற்கோ ராணியாகவும் நெஞ்சத்திற்கொரு செல்வமாகவும் வழங்குமியல்புடையனவாகையிற் புறத்துத் தோன்றும் வேற்றுருக் கோலங்காட்டி யகத்துண்ணுழையா வறமோ அறத்தின் பேறும் பெருமையுடைய வென்பர். எப்பொருளினும் அதனுண்மை யுணர்தலே ஞானம். உணர்ந்த பொருளி னிவையே நல்லவை யெனவும் இவையே யல்லவை யெனவுந் தெளிதலே காட்சி. தெளிந்த வழியே யல்லவை யொருவி நல்லவை மருவி யொழுகலே யொழுக்கம். இந்நல்லொழுக்கமே யனைத்தற னாகையி லிவையெலா மனமுயற்சியா லாக வேண்டுழி, மனமொவ்வா வறனெல்லாம் பொய்யென விகழப்படுவது முறையே யென்பது. அன்றியும் பிறர் நோய்கண்டு அகத்திரங்கானையோவென வாய்பொத்த இரக்கம் காட்டல் தயையோ! நெஞ்சங்கடுத்த சுடுபகை கொண்டான் முகநக நட்பது நட்போ! ஒன்றீந் தொருபத் தடித்துக்கொள்ளத் துணிந்தான் பிறர்க்கீந்துதவுதல் கொடையோ; மனைநகர்நாடு மகல நீக்கி யுட்பொருளின்ப மணுகுமாசை நீங்கான் மறுதுணையில்லா வனம் புக்குறைதல் துறவோ? பிணியுறப் பசிமிகப் பகைபட மொய்த்த துன்ப மின்பமென வுணர்ந் தகங்கலங்காதான் புறத்தும் புலம்பாதிருப்பது பொறையே; பிறர் அழகாசை மனம்புகாத் தன்னிறை காத்த மகளிர் புறத்துக்காட்டு மொடுக்கமுங் கற்பே; தம் மனக்கோட்டங்கண்டு நாணுதல் நாணமே; மனத்திலிறைஞ்சிப் பிறரைப் பணிவான் புறத்துப் பொய்யாச் சொல்லின் வணக்கமும் பணிவே; உளத்திற் கலங்கா தெதிர் வெம்போர்முகத் தஞ்சான் துணிவாய சேவகந்தானும் வீரமே. அன்றியும் உள்ளொவ்வாமற் புறத்துத் தோன்றுஞ் சித்திர அறத்தின் சாயலும் பயன்றரு நல்லறமெனப்படுமாயி னாண்கொண்டாட்டிய புன்மரப்பாவையுங் களிகொண்டாடிய கருகட்பாவையும் வேறு பாடின்றி யொக்கு மெனவுங், கண்ணேகனிய வழகு காட்டி யுள்ளுயிர் கொல்லு நஞ்சுடைக் காஞ்சிரப் பழனும், புறத்துவீசு மணமே யொப்பவகத்து மினிய தேறல் கொண்ட மாங்கனிதானு மொன்றெனவு, மொளிபெற வெழுதிய வோவியப்படமு முயிர் பெற்றெழில் வாழுடலு மொன்றெனவு, மிவை வேறல்ல வென்புழியன்றோ மனமுள்ளொவ்வா வரைந்தோன் முகத்தெழும் பொய் யறச் சாயலும் நெஞ்சில் வீற்றிருந் தினிதிற் புறத்துத் தோன்று மெய்யறமாட்சியும் ஒன்றெனச் சொல்லவும்படுமே. பசியபொற்றூணிரைத்து நாட்டி நெற்றியிற் பவளப் போதிகை யேற்றுபுது வயிர நன்மணியுத்திரம் பாய்த்திப் பளிக்குச் சுவர் மேன்முகிலகடுரிஞ் சுயர்சிகர மொளியின் மணியாற்கூட்டி வானிகர்