உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்ட்வெல் ஐயர்

(1814-1891)

(Right Rev. Robert Caldwell)

கால்ட்வெல் ஐயர் அயர்லாந்து தேசத்திற் பிறந்தவர். கிளாஸ்கோ கல்லூரியிற் கல்விகற்றுத் தேர்ந்தார். பிறகு இலண்டன் மிஷனரிச் சங்கத்தின் சார்பாகச் சமய ஊழியஞ் செய்யும்பொருட்டு 1838-ல் சென்னைக்கு வந்தார். 1841-ல் குருப்பட்டம் பெற்று அதே ஆண்டில் இங்கிலீஷ் சர்ச்சிற் சேர்ந்தார். பின்னர், திருநெல்வேலிக்குச் சென்று அங்கு இடையன்குடி என்னும் ஊரில் தங்கி ஐம்பது ஆண்டுகளாக மதத்தொண்டு செய்துவந்தார். இவர் திருநெல்வேலிக்குப் போகுமுன் அங்கு 600 கிறித்தவர்கள் தாம் இருந்தார்கள். இவர் அங்குச் சென்று ஊழியஞ் செய்ததன் பயனாக, சில ஆண்டுகளுக்குள் 1,00,000 பேராகக் கிறித்தவரின் தொகை அதிகப்பட்டது. 1877-ல் இவர் திருநெல்வேலி பிஷப்பாகப் பட்டங் கட்டப்பெற்றார். பிறகு, தள்ளாமையை முன்னிட்டு 1891-ஆம் ஆண்டு சனவரி மாதம் 31ஆம் நாள் உத்தியோகத்தினின்று நீங்கிக் கோடைக்கானல் மலையில் வாழ்ந்துவந்தார். கடைசியாக, அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாள் காலமானார். இவருடைய உடல் இடையன்குடிக்குக் கொண்டுபோகப்பட்டு அங்கு இவராற் கட்டப்பட்ட ஆலயத்தில் அடக்கஞ் செய்யப்பட்டது. இவருடைய புகழ் ஐரோப்பா முதலிய மேல்நாடுகளிற் பரவியிருப்பதற்குக் காரணம், இவர் ஆங்கிலமொழியில் இயற்றிய "திராவிட மொழி ாழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலேயாகும். “இராயல் ஆசியாடிக் சங்கம், ’ “சென்னைப் பல்கலைக் கழகம்' முதலிய சங்கங்களில் இவர் உறுப்பினராக இருந்தார். இவரது பரந்த கல்வியறிவைப் பாராட்டி இவருக்கு எல்.எல்.டி. பட்டமும் டி.டி.2 பட்டமும் அளிக்கப்பட்டன.

ஆனால்,

1

இவர் யாரிடம் தமிழ்க்கல்வி கற்றார் என்று தெரியவில்லை. தமிழை நன்கு கற்றவர் என்பதில் ஐயமில்லை. தமிழ்மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய