உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

19

இழந்துவிட்டாள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும் என்னும் எண்ணந்தான் அது.

இந்தக் குறிக்கோளுடன் யாப்பருங்கலக் காரிகை விருத்தி யுரையையும், ஏனைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைநூல் களையும் படித்தேன். அவ்வுரையாசிரியர்கள் கூறுகிற நூல்களில் எவைஎவை மறைந்துபோயின என்பதை ஆராய்ந்து எழுதத் தொடங்கினேன். மறைந்துபோன நூல்களிலிருந்து எஞ்சிநின்ற செய்யுள்களையும் தொகுத்து எழுதினேன். இது நிகழ்ந்தது 1952 ஆம் ஆண்டின் இறுதியில் ஆகும். ஆனால், இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ய முடிய வில்லை. இடையிடையே வேறு சில நூல்களை எழுதி முடிக்க வேண்டியிருந்தபடியாலும், வேறு அலுவல்களாலும் இந்த வேலை இடையிடையே தடைப்பட்டது. ஆயினும், சமயம் வாய்க்கும்போ தெல்லாம் இதனையும் ஒருவாறு செய்து முடித்தேன்.

"

இதில் சில நூல்கள் மட்டும், ‘செந்தமிழ்ச் செல்வி' என்னும் திங்கள் வெளியீட்டில் மறைவுண்ட தமிழ் நூல்கள் என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. அதனைக் கண்ட சில அன்பர்கள், நூல் முழுவதும் வெளிவருவது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் என்று கூறினார்கள். ஆகவே, இந்நூல் இப்போது புத்தக வடிவமாக வெளிவருகிறது. மறைந்துபோன நூல்களின் முழுத் தொகுப்பல்ல இந்நூல்; விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன். இப்போது தொகுத்து முடிந்த வரையில் இந்நூல் முதன்முதலாக வெளி வருகிறது.

இந்நூலுக்கு ஒரு முகவுரை எழுதியருளுமாறு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் அன்புடன் இசைந்து முகவுரை எழுதியருளினமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத்

தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை புத்தகப் பதிப்பமாகிய பாரி நிலையத்தின் உரிமை யாளர் திரு. க. அ. செல்லப்பன் அவர்கள், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டமைக்கு, அவர்களுக்கு எனது நன்றி யுரியதாகும். இந்நூலை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டுக் கொடுத்த மங்கை அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரியது.

மயிலாப்பூர், சென்னை-4

15.1.1959

சீனி. வேங்கடசாமி.