உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் இந்நூல் எட்டு ண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சில ஆண்டுகளாக இந்நூல் கிடைக்காமையால் இதை மீண்டும் வெளியிட வேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த இரண்டாம் பதிப்பு வெளியிடப்படுகிறது. இந்தப் பதிப்பில் புதிய சில செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலை வெளியிடுவதில் தமது கருத்துரை களை வழங்கி உதவிய பேராசிரியர் மகாவித்துவான் திரு. மே. வீ. வேணுகோபால பிள்ளை அவர்களுக்கு எனது நன்றி உரியதாகும். இந்நூலை வெளியிட்ட சாந்தி நூலகத்தாருக்கும், அச்சுப் பிழைகளைத் திருத்தியுதவிய திரு. ஊ. ஜயராமன் அவர்களுக்கும் எனது நன்றி.

மயிலாப்பூர், சென்னை-4

30.4.1967

சீனி. வேங்கடசாமி.