உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

15. குணநாற்பது

35

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது இளம் பூரணர், நச்சினர்க்கினியர் என்னும் உரையாசிரியர்களின் உரைகளி லிருந்து அறியப்படுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் 575ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் 'குனிகா யெருக்கின்' என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி, அது குண நாற்பது என்னும் நூலைச் சேர்ந்தது என்று கூறுகிறார். இளம்பூரணர் என்னும் உரையாசிரி யரும், தொல், பொருள்., கற்பியல், “கரத்தினைந்து முடிந்த காலை” என்று தொடங்கும் சூத்திரத்தின் உரையில் அந்தச் செய்யுளையே மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அந்தச் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை. நச்சினார்க்கினியர்மட்டும் அது குணநாற்பது என்னும் நூலைச் சேர்ந்தது என்று கூறியுள்ளார்.

குணநாற்பது அகப்பொருள் இலக்கிய நூல்; நாற்பது செய்யுள் களைக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. இந்நூல் ஆசிரியர் பெயர் என்ன, எக்காலத்தில் இயற்றப்பட்டது முதலிய செய்திகள் தெரியவில்லை. இளம்பூரணர் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட குணநாற்பது செய்யுள் பிழைகளுடன் காணப்படுகிறது. இந்தச் செய்யுளின் சுத்தமான பாடத்தை ஓர் ஏட்டுச்சுவடியில் கண்டு, திரு. ம. ஆ. நாகமணி பண்டிதர் அவர்கள், தாம் எழுதிய ‘தொல்காபியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன' என்னும் நூலின் இறுதியில் பதிப்பித்துள்ளார் (சாது அச்சுக்கூடம், சென்னை, 1935). அந்தச் செய்யுளைக் கீழே தருகிறேன்:

66

'குனிகா யெருக்கின் குவிமுகிழ் வண்டலொடு பனிவா ராவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட மூரு மடவோ னலர்வேன் கொல்லென நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினு

முணரா ளூர்தோ றணிமடற் கலிமா மற்றத் தேறித்தன் னணிநலம் பாடினு மறியா ளென்றி யாண பெருமலை நெடுங்கோ டேறிப் பெருகென்

றுருமிடத் தீயி னுடம்புசுடர் வைத்த

5

10