உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வென்னுறு விழும நோக்கிப் பொன்னொடு

திருமணி யிமைக்குங் கோடுயர் நனந்தலை விழவுடைப் பெண்டி ரிடும்பை நோக்கித் தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி வெளியன் வேண்மான் விளங்கு கரிபோல் மலிகட லுடுத்த மணங்கெழு நனந்தலைப் பலபா ராட்டவும் படுவமோ வமர்தோ டைந்துகவித் தன்ன கால்வீங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்ப லஞ்சிக் காமர் நுழைநுண் ணுசுப்பிற் றாமரை முகத்தியைத் தந்த பாலே.'

16. குமாரசேனாசிரியர் கோவை

15

20

இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. குமாரசேனாசிரியர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

66

குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாருப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஒரடி பதினேனெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஒரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழிந்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்."

இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் கலித் துறைச் செய்யுளை உதாரணமாக மேற்கொள் காட்டுகிறார்:

66

“இருநெடுஞ் செஞ்சுட ரெஃகமொன் றேந்தி யிரவின்வந்த

வருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால்

கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூடுநெற்றிப்

பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே.

இந்தச் செய்யுளை இவ்வுரையாசிரியர், யாப்பருகலம், சீரோத்து 15ஆம் சூத்திர உரையிலும், ஒழிபியலில் இரண்டிடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால் இச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று