உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

யாணர் வரவின் மேனா ளீங்கிவன்

இளமைச் செவ்வி நயந்த பேதையர்

காத லுண்கண் வருபனி நீங்கி

இன்னுந் துயில்கொண் டிலவே யின்றிவன்

போர்வை பசையற வுணங்கிப் பாணர் பழந்தலைச் சீறியாழ் போலக் குரலழிந்து நரம்புமடித் தியாத்த யாக்கை மூப்புறப் பதிகெழு மூதூர் மன்றத்துப்

பொதியிற் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே.

உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை மேம்படு குற்ற மூன்றொடு வழங்கலின் உண்டிநல் லரசு தண்டத்தின் வகுத்த

5

நோன்பிணி யகப்பட் டிருப்பினுந்

தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே.

6

நெருந லென்பது சென்றது நின்ற

இன்றுஞ்-செல்லா நின்றது முன்சென்று

வருநாள் கண்டார் யாரே யதனால்

ஒருநாள் கைப்படுத் துடையோ ரின்மையின் நல்லது நாடுமி னுள்ளது கொடுமின்

வழாஅ வின்பமும் புணர்மி னதாஅன்று கீழது நீரகம் புகினு மேலது

விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது

நேமி மால்வரைக் கப்புறம் புகினுங் கோள்வாய்த்துக் கொட்டுங் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே.

தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூற் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுண் கொண்மூ மழைகா லூன்றா வளவயல் விளையா வாய்மையுஞ் சேட்சென்று காக்குந் தீதுதரப் பிறவு மெல்லா நெறிமாறு படுமே

கடுஞ்சினங் கவைஇய காட்சிக்

கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே.

7

00