உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

எளிதென விகழா தரிதென வுரையாது

நுமக்குநீர் நல்குதி ராயின் மனத்திடை நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளருந் தொழிற்படிற் சினைவிடூஉப் பயக்கு முணர்த்தின் இவணு மும்பருந் துணையே யதனால் துறைதொறுந் துறைதொறு நோக்கி அறமே நிறுத்துமி னறிந்திசி னோரே. வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவா ழொருசிறை நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல் மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப் படையுழா விளையுளி னுணவு மந்திரத்துச் சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற் காடுகைக் கொள்ளு முறையுளு மென்றிவ் வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை காக்கு மாற்றலோடு வென்றுவிளங்கு தவத்தி னரசியற் பெருமை மாக்கட லுடுத்த வரைப்பின்

யார்க்கினி தன்றஃ தறியுநர்ப் பெறினே.

அரையது துகிலே மார்பின தாரம்

முடியது முருகுநாறுந் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது

மாலை தாழ்ந்த மணிக்காற் றனிக்குடை

முன்னது முரசுமுழங்கு தானை யிந்நிலை இனைய செல்வத் தீங்கிவர் யாரே தேவ ரல்ல ரிமைப்பதுஞ் செய்தனர் மாந்த ரேயென மயக்கம் நீங்கக் களிற்றுமிசை வந்தனர் நெருந லின்றிவர் பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையொடு

தாமே யொருசிறை யிருந்தனர் மன்னே.

59

2

3

4