உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

28. மழவை எழுபது

53

மழவை என்பது மழபாடி என்னும் ஊர். அவ்வூரில் எழுந் தருளியுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட எழுபது பாக்களைக் கொண்ட மழவை யெழுபது என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது, களவியற்காரிகை உரையினால் தெரிகிறது. களவியற்காரிகை யுரையாசிரியர், மழவை யெழுபதிலிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார். அச் செய்யுள் இது:

செருமலை தானவர் முப்புரந் தீயெழத் தேவர்கட்கும் வருமலை தீர்த்தவன் மாமழ பாடியில் வந்தெதிர்ந்த கருமலை வீட்டிய செம்மலை யன்றிக் கறங்குவதிம் மருமலை கூந்தலை யார்கொள்ள வேண்டி மணமுரசே.

இந்நூல் அகப்பொருள் துறைகள் அமையப்பாடியது எனத் தெரிகிறது. இதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

29. வங்கர் கோவை

வங்கர் கோவை என்னும் இந்நூலைக் களவியற் காரிகை உரையாசிரியர் தமது உரையில் கூறுகிறார். இது வங்கர் என்பவர் மீது அகப்பொருள் துறையமையப் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம். வங்கர் என்பவர் யார் என்பது தெரியவில்லை. களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் வங்கர் கோவையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “வங்கர் கோவையைக் குறித்து யாதும் அறியக்கூடவில்லை. 'வங்கர் குலோத்தமன் வண்கடந்தை' என வருதலால் சோழர், பாண்டியர் என்பன போன்று வங்கர் என்பதும் அரசர்குலப் பெயராமென்பதும், அக்குலத்தினர் கடந்தை என்பதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றன. தலைநகர்ப் பெயர் தடந்தை எனவும் ஒரு செய்யுளிற் காணப்படுகிறது.

وو

களவியற் காரிகை உரையாசிரியர், வங்கர் கோவையிலிருந்து மூன்று செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை:

விந்தா சனிகொண்கண் வேந்தரி

லாண்பிள்ளை வென்றிவெற்பிற்

கொந்தார் தினைப்புனங் காவனிற் பீர்வழி கூறுமென்று