உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

4மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட திவ்வழி யென்றி யியறார் மார்ப

எவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்

புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யெறிந்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டற் காகாது வேந்துடை யரணே.

பெருநீரால் வாரி சிறக்க விருநிலத் திட்டவித் தெஞ்சாமை நாறுக நாறார முட்டாது வந்து மழைபெய்க பெய்தபி னொட்டாது வந்து கிளைபயில்க வக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன வக்கதிர் ஏர்கெழு செல்வர் களநிறைக வக்களத்துப் பேரெலாங் காவாது வைகுக போரின் உருகெழு மோதை வெரீஇப் பெடையொடு நாரை யிரியும் விளைவயல்

69

9

யாணர்த் தாகவவ னகன்றலை நாடே.

10

அரும்பொனன் னார்கோட்டி யார்வுற்றக் கண்ணுங் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிப வொன்றோ துயில்மடிப வல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா விருந்து.

11

5நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ

டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்

செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய்

மறிக்குரற் குறுதி மன்றுதுக ளவிப்ப

விரிச்சி யோர்தல் வேண்டா

இருநில மருங்கி னெப்பிறப் பாயினும்

எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.

6

மருவின் மாலையோ வினிதே யிரவின்

12

ஆகோள் மள்ளரு மளவாக் கானத்து

நாம்புறத் திறுத்தனெ மாகத் தாந்தங்

கன்றுகுரல் கேட்டன போல

நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே.

13