உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -15

99

இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது. “மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பி யெவ்வாயும் எந்திறப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும் என்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத்

தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர

நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யிரும்பொறை

பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே.

47

இது பொன்முடியார் பாட்டு

66

"கலையெனப் பாய்ந்த மாவு மலையென

மயங்கம ருழந்த யானையு மியம்படச்

சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுததைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்கண் ஆடவர்

மிளைபோ யின்று நாளை நாமே

உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப

யுருமிசை கொண்ட மயிர்க்கட்

டிருமுர சிரங்க வூர்கொள் குவமே.

48

இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.

"மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட

·