உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வண்ண மாலை வாள்விடக் குறைந்தன

வாயே,

பொருநுனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந் தாவ நாழிகை யம்புசெறித் தற்றே

நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பல்சர நிறைத்தன வதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே.

11

"வாதுவல் வயிறே வாதுவல் வயிறே

நோலா வதனகத் துன்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே

41

எம்மில் செய்யா வரும்பழி செய்த

கல்லாக் காளைநின் னீன்றே வயிறே.

இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்

புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க

வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா

தோற்கண்ண போலுந் துடி.

இழுமென முழங்கு முரசமொடு குழுமிய

ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னூர்ச்

சிறையில் விலங்கிச் செவ்வே லேந்தி

யாண்டுபட் டனனே நெடுந்தகை

ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே.

42

43

44

தக்கயாகப் பரணி, காளிக்கு கூளி கூறியது, 397ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது தகடூர் யாத்திரை என்று குறிப்பிடுகிறார். இவர் காட்டிய இச்செய்யுள் புறத்திரட்டில் காணப்படவில்லை. இவர் காட்டிய செய்யுள் இது:

கனவே போலவு நனவே போலவு

முன்னிய தன்றியென் னுள்ளக நடுக்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும் இருவகை யுயர்திணைக் கேந்திய கொடியொடும்