உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

வெருவந்த தோற்றத்தா லுருவின பலகூளிக் கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும்

பறையன்ன விழித்தகண்ணாள் பிறையன்ன பேரெயிற்றாள் குவடன்ன பெருமுலையா ளிடைகரந்த பெருமோட்டாள் இடியன்ன பெருங்குரலாள் தடிவாயாற் றசைப்புறத்தாள் கடலன்னபெருமேனியாள்காண்பின்னக்கமழ்கோதையாள் சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய வகலல்குலாள் மழையு மஞ்சும் வளியும் போலுஞ்

செலவினா ளொருபெண் டாட்டி

தலைவிரித்துத் தடக்கைநாற்றி

மறனெறிந்து மாறுகொண்டறியா

வறிவுக்கிம் முறைநா னிவ்வள வன்றே பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன் கைகளா னிலனடித் தூரை யிடஞ்செய்து காடு புகுதல் கண்டே னென்னுங் கவலை நெஞ்சமொ டவல நீந்தினாள் அன்றது மன்றவ் வதிகமான் றாய்க்கு.

77

45

கீழ்க்கண்ட நான்கு செய்யுள்களை நச்சினார்க்கினியர், தொல் காப்பிய (பொருள், புறத்திணை, “இயங்குபடை யரவம்”, “கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்” என்னும் சூத்திரங்களின்) உரையில் மேற்கோள் காட்டு கிறார். ஆனால், அவர் இச்செய்யுள்கள் தகடூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று குறிக்கவில்லை. எனினும், இவை தகடூர் யாத்திரையைச் சேர்ந்தன என்று ஐயமறத் துணியலாம்.

“மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய நுண்க ணோக்கிச் சிறிய

கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே.

46