உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர்

தீண்ட றகாது வெந்துறை யானே.

இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.

3. பெரும்பொருள் விளக்கம்

79

49

இப்பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பதைப் புறத்திரட்டு என்னும் தொகை நூலிலிருந்தும், நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய (பொருள். புறத்திணையியல்) உரையிலிருந்தும் அறிகிறோம்.

பெரும்பொருள் விளக்கத்தின் ஆசிரியர் பெயர், அவர் இருந்த காலம், நூலியற்றிய காரணம் முதலிய செய்திகள் ஒன்றும் தெரிய வில்லை.

கீழ்க்காணும் பெரும்பொருள் விளக்கத்துச் செய்யுள்களைப் புறத்திரட்டில் உள்ளபடியே தருகிறேன். இச்செய்யுள்களில் பலவற்றை நச்சினார்க்கினியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திரட்டுச் செய்யுள்களுக்குள்ளும் நச்சினார்க்கினியர் செய்யுள் களுக்கும் பாடபேதங்கள் உள்ளன. பாடபேதங்களை இங்குக் காட்டவில்லை. புறத்திரட்டில் காணப்படும் பெரும்பொருள் விளக்கச் செய்யுள்கள் வருமாறு:

மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப்

பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ தாங்கே

அளிப்பாரும் மக்களாம் ஆறு.

13

இளையர் முதியர் எனவிருபால் பற்றி

விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம்

ஒன்றாது நீத்தான் உளன்.1'

14

1

2