உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இந்தப் பழைய கதையை ஆகமராசன் சொல்லியதைக் கேட்ட தசரதன் வியப்படைந்தான்.

அப்போது, மகாபலன் என்னும் அமைச்சன் தசரதனுக்கு இவ்வாறு கூறினான்: “ஜனகராசன் எந்த யாகம் செய்தால் நமக்கென்ன? இராமலக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினால் அவர்களுடைய ஆற்றலை அங்குள்ளவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் நடைபெறும்" என்று கூறியதைக் கேட்ட தசரதன், இராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அனுப்பினான். ஜனகன் யாகத்தைச் செய்து முடித்து, சீதையை இராமனுக்குத் திருமணம் செய்வித்தான். பிறகு இராமலக்ஷமணர் சீதையுடன் அயோத்தித்குத் திரும்பிவந்தார்கள்.

தசரதன் தனது பழைய ராஜ்யமாகிய காசி தேசத்து வாரணாசி நகரத்துக்கு இராமனை அனுப்பி, அவனை அங்கு அரசனாக்கினான். இலக்ஷ்மணனும் இராமனுடன் வசித்து வந்தான்.

ஒரு நாள் நாரத முனிவன், இராமலக்ஷ்மணரின் சபைக்குச் சென்றான். நாடக நடனங்களில் மனத்தைச் செலுத்தியிருந்த இராம லக்ஷ்மணர்கள் நாரதனை வரவேற்கவில்லை. அதனால் சினமடைந்த நாரதன், ‘சீதையை இராமனிடமிருந்து பிரித்துவைத்து இவர்களை மான பங்கம் செய்வேன்' என்று எண்ணினவனாய், நேரே இலங்கைக்குச் சென்று இராவணனைக் கண்டு, சீதாலக்ஷ்மியின் அழகை அவனிடம் புகழ்ந்து பேசினான். “இராமனுடன் ஆசனத்திலிருந்த சீதாலக்ஷ்மியைக் கண்டு வியப்படைந்தேன். இலங்கேசுவரனாகிய இராவணனுக்கு, இராமனைப் போன்று காமசுகம் இல்லையே என்று மனங்கவன்றேன்" என்று கூறினான். அப்போது இராவணனுக்குச் சீதையைத் தான் அடைய வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதனைத் தெரிந்து கொண்ட நாரதன். தனது சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, “இராமன், பல அரசர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டிருக்கிறான். அவனை யுத்தம் செய்து வெல்ல உன்னால் முடியாது. ஆகையால், சீதையை நீயடைய வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டுவிடு” என்று கூறி, அறிவுரை கூறுவதுபோல அவனுக்கு ஆவலை யுண்டாக்கினான்.

நாரதன் சென்ற பிறகு சீதாலக்ஷ்மியைத் தான் அடையவேண்டும் என்னும் எண்ணம் இராவணனுக்கு அதிகப்பட்டது. ஆகவே, அவன்