உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

103

சூழ்ச்சி செய்தான். கணவன் மனைவியைப் பிரித்துவைப்பதிலும் சேர்த்துவைப்பதிலும் கைதேர்ந்த வித்தைக்காரியான சூர்ப்பனகை என்னும் பணிப்பெண்ணை அழைத்து, அவளிடம் தன் கருத்தைக் கூறி அவளைச் சீதையிடம் அனுப்பினான். அவள் வாரணாசி சென்று சீதையிடம் பல சூழ்ச்சிகளைச் செய்துபார்த்தாள். கடைசியில் சீதை கற்புக்கரசி என்பதை அறிந்து, தன் சூழ்ச்சி பலிக்காமல் திரும்பிவந்து, இராவணனிடம் சீதையின் கற்பைப் புகழ்ந்துரைத்தாள்.

பிறகு, இராவணன் தனது அமைச்சனான மாரீசன் உதவியினால் சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டு போய் இலங்கையில் சிறைப்படுத்தினான். இதையறிந்த இராமன், சேனையுடன் சென்று இராவணனுடன் போர் செய்து, சீதையை மீட்டுக்கொண்டு வந்தான். இதுவே ஜைன இராமாயணத்தின் கதைச்சுருக்கம்.

இந்தக் கதையைத்தான் ஜைன இராமாயணம் என்னும் காவியம் கூறுகிறது. இந்த இராமாயணம் இப்போது இறந்து விட்டது. ஆனால், இதிலிருந்து சில செய்யுள்கள் ஸ்ரீபுராணம் என்னும் வசன நூலில் மேற் கோள் காட்டப்பட்டுள்ளன. ஜைன இராமாயணத்தைச் செய்யுளாகப் பாடிய ஆசிரியர் யார் என்பதும், அவர் எக்காலத்தில் இந்நூலை இயற்றினார் என்பதும், இந்நூலுக்கு அவர் என்ன பெயரிட்டிருந்தார் என்பதும் தெரியவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட இந்தச் செய்யுள் களை நோக்கும்போது, இந்த நூல் சிறந்த உயர்ந்த காவியமாகத்தான் இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.

மணிப்பிரவாள வசனநடையில்

உள்ள ஸ்ரீபுராணத்தில்

மேற்கோள் காட்டப்பட் ஜைன இராமயாணச் செய்யுள்கள் இவை:

66

'மழைலைவாய் மொழியின் மார்பின்

வைத்துவா யமுத முண்டும்

மழலையை விளித்து விஞ்சை

யோதுநா ளஞ்சு வித்தும்

உழையனார்ப் புணருங் காலைத்

தோழரோ டொத்தும் இவ்வா

றொழுகலா றொழிந்த நம்மால்

உற்றதிக் குற்ற மென்றும்.