உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

"தொடர்த்தொடர்ப் படுவ தொக்கும்

தொட்டிற் சுருக்கி மெய்யைக்

கடக்கப்பாய்ந் திட இளைத்துக்

கறுகினைக் கறித்துக் காதல் வடிக்கண்ணார் போல நோக்கும்

அடுத்தடுத் தணுகும் நீங்கும்

அணியது போன்று சேய்த்தாம்.

105

மாரீசன், மானுருவங் கொண்டு இராமனிடம் அகப்படாமல் அவனைத் தூரத்தில் அழைத்துச் சென்றதைக் கூறுகிறது. சிதைந்து போன இந்தச் செய்யுள்.

66

"உருமிடப் புண்ட வருமணி நாகமெனத்

திருமணி நிலத்திற் றேவி சோர்ந்து

செய்த பாவையின் மெய்திரி வின்றி

மையலி னுயிர்த்து மடிந்துடன் கிடப்ப.

சீதாலக்ஷ்மியை இராவணன் அசோக வனத்தில் வைத்த பிறகு தனது உருவத்தைச் சீதைக்குக் காட்டியபோது அவள் சோர்ந்து மூர்ச்சை யடைந்த செய்தியைக் கூறுவது, இவ்வகவற்பா செய்யுட் பகுதி.

66

'அறிவுற்றங் கெழுந்த பாவை யமருல கத்துச் சென்று பிறவிபெற் றவரைப் போல யாவிர்நீ ரிதுவென் என்ன அறிவித்தார் யாங்கள் விச்சா தரியரீ திலங்கை என்ன

மறியத்தான் மயங்கி வீழ்ந்தாள் வழுத்தரு வாளை யொத்தாள்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாலக்ஷ்மி தன் அருகிலிருந்த பணிப் பெண்களை ‘நீவிர் யார், இது எந்த ஊர்' என்று கேட்டபோது, அவர்கள் இது இலங்கை, நாங்கள் விச்சாதரப் பெண்கள் என்று கூறக் கேட்டு, மீண்டும் மூர்ச்சை யடைந்ததைக் கூறுகிறது. இச்செய்யுள்.

66

விம்முறு துயரிற் கொம்மென உயிரா

விளைந்த தெல்லாம் உளங்கொள வுணரா எழுதுகண் ணருவி யினைந்தினைந் திரங்கலின்

ஒழுகுபு பொழிய முழுகிய மேனியள்

அழுதழு தலறி ஆ!ஓ! என்னும்;

இணைபிரி யன்றிலின் ஏங்கி நீங்காத்

துணைவனை நினைந்து சோகமீ தூர்தர