உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

25

இந்த வாணிகக் குழுவினர் வாணிகப் போட்டியின் காரணமாகத் தமக்குள் பகைமை பாராட்டிச் சண்டையிட்டுக் கொண்டார்கள். மேலும், அவர்கள், நாட்டை ஆண்ட நவாப்புக்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுடன் சேர்ந்து அவர்கள் நிகழ்த்திய போர்களிலும் சண்டைகளிலும் தாங்களும் கலந்து கொண்டனர். 'தடிஎடுத்தவன் தண்டக்காரன்' என்பதுபோல, வெற்றி பெற்றவன் அரசனானான். நீதி, நியாயம், முறை, ஒழுங்கு என்பது இல்லாமல் குழப்பமும் கொள்ளையும் நாட்டில் தாண்டவமாடின. நாடுகடந்து வாணிகம் செய்ய வந்த இவர்கள், நாட்டின் நிலைமையைக் கண்டு தாங்களே ஆட்சியைக் கைப்பற்றி அரசாள ஆசைகொண்டனர். இதன் காரணமாகவும் இந்த வாணிகக் குழவினருக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டன. இவர்களில் போர்ச்சுகீசியரும் ஒல்லாந்தரும் நாளடைவில் மறைந்தனர். பிரெஞ்சுக் காரரும் ஆங்கிலேயரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு. நவாப்புக் குடும்பச் சண்டையில் தலையிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்கள். இந்த முயற்சியில் ஆங்கிலேயர் கடைசியில் வெற்றிபெற்றார்கள்.

-

கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சண்டைகளும் போர்களும் ஒருவாறு அடங்கி நாட்டின் ஆட்சி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரின் கையில் வந்து. இவர்கள் ஆட்சிக்கு உட்படாத சுற்றுப்புறத்திவிருந்த அரசர்களும் இவர்களுக்குக் கீழடங்கினார்கள். சின்னா பின்னமாகச் சிதறுண்டு கிடந்த நாடு ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயக் கும்பினியார் குழப்பங்களை அடக்கி நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டிலே முழு அமைதி ஏற்படாமற் போனாலும், பிற்பகுதியில் முழு அமைதி ஏற்பட்டது. அந்த நூற்றாண்டின் பிற்பகுதயிலே கி.பி. 1858-ஆம் ஆண்டிலே, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தான் கைப்பற்றியிருந்த ஆட்சியை ஆங்கில மன்னரின் ஆட்சிக்குக் கொடுத்துவிட்டது. அன்னியர் ஆட்சியாக இருந்த போதிலும் நாட்டிலே அமைதியும், ஒழுங்கும், நீதியும், நம்பிக்கையும் பாதுகாப்பும் ஏற்பட்டன. முன்பு மூன்று நூற்றாண்டுகளாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் புயல் ஒய்ந்து, இந்த நூற்றாண்டில் அமைதி ஏற்பட்டபடியால் மக்கள் ஆறுதல் அடைந்தனர். நாட்டில் நிரந்தரமான ஆட்சியும் அந்த ஆட்சியில் அமைதியும் ஒழுங்கும் வாழ்க்கையில்