உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நம்பிக்கையும் ஏற்பட்டன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாவல் ஏற்பட்டது. ஆகவே, மக்கள் நூல்களைப் படிக்கவும் கல்விகற்கவும் வாய்ப்புப் பெற்றனர். அன்றியும் ஆங்கில ஆட்சி ஒருவகையில் நாட்டு மொழியைப் போற்றியது. ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆங்கிலேயர்களை ஆட்சிசெலுத்தும் அலுவலாளராக அமர்த்தியிருந்தார்கள். அந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள், அவர்கள் ஆட்சி செய்யும் வட்டாரத்துத் தாய் மொழியை அறிந்திருக்கவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தி யிருந்தார்கள். அக்காலத்தில் ஆங்கில மொழி அரசியல் மொழியாக ஏற்படவில்லை. வட்டாரமொழியைப் பயின்று பரீட்சையில் தேறியவர்களுக்குத்தான் சம்பளம் உயர்த்தப் பட்டது. இக்காரணத்தினாலே, தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளாயினர். அவர்கள் தமிழ் படிப்பதற்காகவும், அவர்களைப் பரீட்சிப்பதற்காகவும் சென்னைத் தமிழ்ச் சங்கம் (Fort st. George college) என்னும் சங்கத்தை அமைத்தார்கள். கம்பெனி ஆட்சிக்குப் பின்னர் ஆங்கில மன்னர் ஆட்சி ஏற்பட்ட பிறகு, அவர்கள் கல்லூரிகளையும் கலா சாலைகளையும் ஏற்படுத்தித் தமிழ்க் கல்விக்கு ஆக்கம் அளித்தனர். இவ்வாறு அரசியல் சூழ்நிலையினாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

·

வாழ்க்கைச் சூழ்நிலை: அமைதியான அரசியல் காரணமாக சமூக வாழ்க்கையிலே மக்களின் உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது. அதனால் அமைதியும் ஒழுங்கும் நம்பிக்கையும் மக்களுக்கு ஏற்பட்டன. மக்களின் நல்வாழ்விற்கும் ஆக்கத்திற்கும் வை இன்றியமையாதவை யல்லவா? இந்த நல்ல சூழ்நிலையின் காரணமாக, முந்திய நூற்றாண்டுகளைவிடப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியம் அதிகமாக வளர்ச்சி யடைந்தது. அரசியல் அமைதிமட்டும் அல்லாமல் அதுவரையில் சிடைத்திராத வேறு சில வசதிகளும் கிடைத்தன. அந்தப் புதிய வசதிகள் எவை என்றால், இருப்புப்பாதையும் தபால் தந்தியும் ஆகும். ஆங்கில அரசாங்கத்தார் மேல்நாட்டுமுறையை ஒட்டி இவற்றை அமைத்தார்கள். இந்தப் புதிய வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் பல ஊர் மக்களுடன் நெருங்கிப் பழகவும் கடிதம் எழுதிச் செய்தி யறியவும் வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இந்த வாய்ப்புக்கள் ஏற்பட்ட 19-ஆம்