உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

27

நூற்றாண்டிலே, ஏனைய மக்களைப் போலவே, புலவர்களும் பண்டிதர்களும் மற்ற ஊராருடன் எளிதில் பழகவும் அளவளாவவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிந்தது. பெரும்பொருட் செலவும் அதிககாலச் செலவும் இல்லாமல் குறைந்த செலவில் சுருங்கிய நேரத்தில் வேறு ஊரில் உள்ள புலவர்களுடனும் கவிஞர்களுடனும் நெருங்கிப் பழக நல்ல வாய்ப்பு ஏற்பட்டதால் அதன் காரணமாகக் கல்வியறிவு வளர்வதாயிற்று.

இந்நாட்டிலே நெடுங்காலமாக இருந்துவந்த சாதி வேற்றுமை களையும் உயர்வு தாழ்வுகளையும் ஆங்கில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாமல் எல்லோருக்கும் சரி சமானமான நிலையையளித்தபடி யினாலே, “உயர்ந்தசாதி” மக்கள் மட்டும் அல்லாமல், “தாழ்ந்த சாதி' மக்களும் கல்விகற்கத் தொடங்கினார்கள். அரசாங்கத்தார் பாடசாலை களையும் கலாசாலைகளையும் ஏற்படுத்திய படியால் அவற்றில் மாணவர் சாதி பாகுபாடு இல்லாமல் கல்வி கற்றனர். தமிழ் வித்து வான்களும் பண்டிதர்களும் அக் கலாசாலைகளிலும் பாடசாலை களிலும் தமிழ் ஆசிரியராக அமர்ந்தனர். பெண்களுக்காகவும் பாட சாலைகள் ஏற்பட்டபடியால், பெண்மணிகளும் கல்வி கற்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சமூகச் சூழ்நிலையினாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி இலக்கியம் வளர்ச்சியடைந்தது.

சமயச் சூழ்நிலை: பத்தொன்பதாவது நூற்றாண்டுக்கு முந்திய நூற்றண்டுகளிலே அயல் நாட்டிலிருந்து வேறு இரண்டு சமயங்கள் நமது நாட்டில் வந்திருந்தன. அவை, முகம்மதிய மதம் எனப்படும் இஸ்லாம் மதமும், விவிலிய மதம் எனப்படும் கிறிஸ்துவ மதமும் ஆகும். பதினாறாம் நூற்றண்டிலே வாணிகத்தின் பொருட்டு நமது நாட்டுக்கு வந்த போர்ச்சுகீசியரும் அவருக்குப் பின்வந்த வேறு ஐரோப்பிய வணிகக் குழுவினரும் தங்களுடன் கிறிஸ்துவப் பாதிரி மார்களை அழைத்து வந்து நமது நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்து மக்களில் பலரைக் கிறிஸ்தவராக்கினார்கள். ஆனால், 19-ஆம் நூற்றண்டில் முந்திய நூற்றண்டுகளைவிட அதிகமாகக் கிறிஸ்துவப் பாதிரிமார் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்து வந்து நமது நாட்டு மக்களைக் கிறிஸ்துவராக மதம் மாற்றினார்கள். அவ்வாறு மதம் மாறிய மக்களுக்கு மதசம்பந்தமான பல தமிழ்நூல்களை முக்கியமாக வசன நூல்களை அவர்கள் எழுதினார்கள். அவர்களைப்போலவே இஸ்லாமியரான முகம்மதியர்களும் அந்த நூற்றண்டிலே தமது