உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

“உலக மூன்று மொருங்குட னேத்துமாண்

டிலக மாய திலறறி வனடி

வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந்

தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்.

இச் செய்யுளை, இளம்பூரணர் தொல்காப்பிய (செய்யுளியல், 98ஆம் சூத்திரம்) உரையுள் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இது எந்த நூற் செய்யுளென்று கூறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் இச் செய்யுளை 37ஆம் சூத்திர உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவரும் இச்செய்யுள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டது என்பதைக் கூறவில்லை. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம், செய்யுளியல் 148ஆம் சூத்திர உரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டி. இதனை வளையாபதிச் செய்யுள் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, இது வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் என்பது தெரிகிறது.

6

கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்கள், புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன:

66

'விளைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லு யிர்க்கு மனிதரி னரிய தாகுந் தோன்றுதல், தோன்றி னாலும், இனியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்ன தேயாம். உயர்குடி நனியுட் டோன்றல் ஊனமில் யாக்கை யாதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல் பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோடல் என்றாங் கரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்.

நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே.

1

2

3

பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம்

வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்

கள்ளவிழ் கோதையர் காமனொ டாயினும்

உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ.

4