உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1847-ஆம் ஆண்டில் சென்னை இலக்கியச் சங்கத்தினிடம் இருந்த ஏட்டுச் சுவடி நூல் நிலையத்தில் ஐந்து தொகுப்புகள் இருந்தன.

அவை:

1. இந்தியா ஹவ்ஸிலிருந்து அனுப்பப்பட்ட சுவடிகள். இதில் டாக்டர் லைடனுடைய தொகுப்பும் அடங்கிருந்தது.

5

2. பிரௌன் என்பவருடைய தொகுப்பு.

3. கல்கத்தாவிலிருந்து வந்த மெக்கன்ஸியின் தொகுப்பு.

4. காலேஜின் (சென்னைக் கல்விச் சங்கம்) புத்தகாலயத் தொகுப்பு. 5. இலக்கியச் சங்கத்தின் தொகுப்பு.

இலக்கியச் சங்கத்திலிருந்த ஏட்டுச்சுவடிகள் பிறகு சென்னைக் கல்விச் சங்கத்துக்கு மாற்றப்பட்டன. 1853-இல் இந்த ஏட்டுச் சுவடிகளுக்கு விளக்கமான பட்டியல் எழுதப்பட்டது. பட்டியலை எழுதியவர் உல்லியம் தய்லர்' என்பவர்.

பிறகு, சுவடிகள் சென்னை மாகாணக் கல்லூரி நூல் நிலையத்துடன் சேர்க்கப்பட்டு "அரசாங்கத்துக் கிழக்கு நாட்டுக் கையெழுத்து நூல் நிலையம்”8 என்னும் பெயர் பெற்றது. 1867-இல் இந்த நூல் நிலையம் கல்வித்துறைத் தலைவர் பொறுப்பில் ஏற்பிக்கப்பட்டது. 1868-ஆம் ஆண்டு சென்னை மாகாணக் கல்லூரியின் சமஸ்கிருத ஆசிரியரிடம் இந்தப் புத்தகசாலையின் சில பொறுப்புகள் ஏற்பிக்கப்பட்டன. அவர் புதிய சமஸ்கிருத ஏட்டுச் சுவடிகளையும் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய ஏட்டுச் சுவடிகளையும் சேகரிக்கவும், அவற்றிற்கு விளக்கமான பட்டியல் எழுதவும் கடமையளிக்கப்பட்டார். 1869-ஆம் ஆண்டு இப்புத்தக சாலையின் முழு ஆட்சிப் பொறுப்பும் மாகாணக் கல்லூரியின் சமஸ்கிருத ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1873-ஆம் ஆண்டு இதன் தலைவர் குயூரேட்டர்” என்னும் பெயருடன் பொறுப்பேற்றார்.

அடிக்குறிப்புகள்

1. Madras Govt. Oriental Mss. Library.

2. Asiatic Association.

3.

4.

5.

Madras Liberary Society and Auxiliary of the Royal Asiatic Society. East India House.

Dr. Leyden's Collection.

6. Mr. Brown's Collection.

7.

8.

William Taylor.

Government oriental Mss. Library. Madras.

9. The Director of Public Instruction.

10. Curator.