உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

121

சென்ற 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வளையாபதி காவியத்தின் ஏட்டுப் பிரதி திருவாவடுதுறை மடத்தில் இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் அந்த ஏட்டுப் பிரதி எப்படியோ மறைந்து விட்டது. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள், திருவாவடுதுறை மடத்தில் சேர்ந்து, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடத்தில் பாடங்கேட்ட காலத்தில், மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியைக் கண்ட தாகவும், பிற்காலத்தில் அச்சிற் பதிப்பிப்பதற்காக அதனைத் தேடியபோது அந்தச் சுவடி கிடைக்க வில்லை என்றும் எழுதியிருக்கிறார்:

"பிள்ளையவர்கள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள்) இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாக வில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராயவேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்தபோது, அந்தச் சுவடி மடத்துப் புத்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயின வென்று தெரிந்து அவற்றிற்காக வருத்த மடைவது என் இயல்பு. கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!' என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. 'கண்ணிலான் பெற்றிழந்தான் என வுழந்தான் கடுந்துயரம்' என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிடவேண்டும்.'

g

தக்கயாகப் பரணியின் (181ஆம் தாழிசை) பழைய உரையாசிரியர், வளையாபதி கவியழகுள்ள நூல் என்று கூறுகிறார். அவர் எழுதுவதாவது:

66

"எங்ஙனம் அங்ஙனம் என்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் (தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக் கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி எங்ஙனமென்று இவ்வாறே வளையாபதியிலுமுண்டு."

வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: