உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

137

'அறிவுடைநம்பியார் செய்த சிந்தம் எப்பாற்படுமோ வெனின், தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத் தருகு தனிச் சொலின்றித் ‘தாழிரும் பிணர்த் தடக்கை’ என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையாற்றனிச் சொலில்லா வஞ்சிப்பா வென்று வழங்கா மோவெனின், வழங்காம்: செவியறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருளுறுப் பழிந் தமையால் உறுப்பழி செய்யுள் எனப்படும்: புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியுமாய் வரப்பெறா என்றாராகலின்.’

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

9. ஆயிரப்பாடல்

இதனை இயற்றியவர், கமலை ஞானப்பிரகாசர். இது இப்போது மறைந்துவிட்டது. இப்பெயருள்ள நூல் இருந்த தென்பதைச் சோழமண்டல சதகத்தினால் அறிகிறோம்.

“பகர்ந்த கமலைத் தியாகே சர் பஞ்சாக் கிரத்தின் பயனறிந்த திகந்த குரு ஆயிரப்ரபந்தஞ் செய்த குரவன் திருவாரூ

ருகந்த ஞானப் பிரகாச னுண்மைக் குருவி னுயர்குலத்தோன் மகிழ்ந்த வாழ்வு பன்னாளும் வளஞ்சேர் சோழ மண்டலமே என்னும் செய்யுளினால் இச்செய்தி விளங்குகிறது. இது 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்.

10. ஆரிய படலம்

இந்நூலின் பெயரை, மயிலைநாதர், நன்னூல்; உரையில் குறிப்பிடுகிறார். “முதனூலாற் பெயர் பெற்றன ஆரிய படலம், பாரதம் முதலாயின" என்று அவர் எழுதுகிறார். (நன்னூல், பாயிரம், 48 உரை). இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

11. இசையாயிரம்

தமிழ் நாவலர் சரிதையில் ஒரு தனிப்பாடல் காணப்படுகிறது. அதன் தலைப்பில், “செட்டிகள்மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் ‘புகார் ஊர்' என்று பாடச் சொல்லியது” என்னும் குறிப்பு எழுதப் பட்டுள்ளது. எனவே. இசையாயிரம் என்னும் நூல் செட்டிகள் மேல் பாடப்