டாக்டர் எஸ்.எம். கமால் &Σ (பகுதியில் இருந்த முஸ்லி மக்கள் மன்னர்களைப் συσου' மிகச்சிறப்பாகவும், செல்வ வளத்தில் மிக்கவர்களாகவும் இருந்தனர் எனக் குறிப்பிட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது. என்றாலும் தொடர்ந்து போர்ச்சுக்கீசியர்களது அலுவலராக அந்த நெய்னார் பணியாற்றி வந்தார். இவர் மிகுந்த அக்கரையுடனும், பொறுப்புடனும் போர்ச்சுக்கீசியரிடர் நடந்து கொண்டதை அவர்களது 18.10.1523ல் போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்பிய ஆவணம் ஒன்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில் போர்ச்சுக்கீசியர் கிழக்கரையை பெட CARE (€50,0súsawa), CALL CARE (asoosood), CALOE CARE (கலோ கரை) என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கிழக்கரைப் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடைப் பெற்று வந்தது. இதனை அறிந்த காயல் பட்டினம் நெய்னார்கள் கீழக்கரையில் முத்துக்குளிப்பதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கேப்டன் ஜாவோ .:ப்ளோரனையக் கோரினர். இது நிகழந்தது கி.பி.1520 - ல் இதனை அடுத்து கேப்டன் ஜாவோ.:ப்ளோரிஸ் கீழக்கரை நெய்னாரும் கீழக்கரை முத்துக்குளித்தலில் போர்ச்சுக்கீசியருக்கு செலுத்த வேண்டிய தொகை பற்றி உடன்பாடு கண்டனர். கி.பி.1526-27 படி கிழக்கரை நெய்னார் போர்ச்சுக்கீசியருக்கு 3000 பர்தோஸ் (போர்ச்சுக்கீசிய நாணயம்) வருடந்தோறும் செலுத்தி வந்தார். கிழக்கரை முத்துக்குளித்தலில் இரண்டு வகையான முத்துக்கள் கிடைத்ததாகத் தெரிய வருகிறது. அவை "Gl 1Gym sosio”(PEROLAS), "216vGEgm Luft” (AL-JOFER) என்பவையாகும். இதில் இரண்டாவது குறிப்பிடப்பட்டுள்ளது முதலாவதைவிட தரத்திலும் விலையிலும் குறைந்ததாகும். ஆனால் இத்தகைய முத்து (அல்ஜோபர்) கிழக்கரையிலிருந்தும் புன்னைக்காயலிலிருந்தும் லி ஸ்பனுக்கு பதினாறாம் நூற்றாண்டில் எடுத்துச் செல்லப்பட்டதின் நிறை 700 அவுன்ஸ் (என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையிலான சிறிய
பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/33
Appearance