உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

---

169

இத்தொடக்கத்துப் பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்த முதலாகிய வொருசார் செய்யுள் களும் எப்பாற்படுமோ வெனின், ஆரிடச் செய்யுள் எனப்படும். ஆரிடமென்பது உலகியற் செய்யுள்கட் கோதிய உறுப்புகளின் மிக்கும், குறைந்துங் கிடப்பன எனக் கொள்க.”

இதனால், இந்நூலை இயற்றியவர் குடமூக்கிற் பகவர் என்பது அறியப்படுகிறது. குடமூக்கு என்பது கும்பகோணம். கும்ப கோணத்தில் இருந்த பகவர் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இந்த நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

67. வீரணுக்க விசயம்

வீரசோழ அணுக்கர் என்பவர்மீது இந்நூல் இயற்றப்பட்டது. இந் நூலை இயற்றியவர், பூங்கோயில் நம்பி என்பவர். இந்நூலை இயற்றிய தற்காக இவருக்கு நிலத்தைத் தானமாக வழங்கினான் சோழ அரசன் என்று திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் சாசனம் ஒன்று கூறுகிறது.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

15