உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாக வடக்கிச் சுவையுங் குறிப்புஞ்சத்துவமு மென மூன்றாக்கி வேறுவேறிலக்கணங் கூறிஅவற்றை,

‘எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென

நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப

என்றோதினா ராயிற்றென்பது.

(தொல். பொருள். மெய்ப்பாட்டியல், 2ஆம் சூத்திர உரை) யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றிக் கூறுவது:

66

'கலியுறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும், செயிற்றியத் துள்ளும், அகத்தியத்துள்ளும் கண்டுகொள்க, அவை யீண்டுரைப்பிற் பெருகும்.

(யாப்பருங்கலம், செய்யுளியல், 29ஆம் உரை)

“மற்றையன விவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் ஓதிய விலக்கணந் தழுவிக் கிடந்தனவில்லை யென்பது.

(யாப்பருங்கலம், செய்யுளியல், 31 ஆம் உரை)

"வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன: பதினோராடற்கு மேற்ற பாட்டு. அவை அல்லிய முதலியனவும், பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப் பாட்டாய் வருவன ... இனி, இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உறுப்பு 6, கொட்டியுறுப்பு 4, துடையுறுப்பு 4, குடத்தினுறுப்பு 5, பாண்டரங்கு உறுப்பு 6 மல்லாடலுறுப்பு 5, துடியாடலுறுப்பு 6, கடையத்துறுப்பு 6, பேட்டின் உறுப்பு 4, மரக்காலாடல் உறுப்பு 4, பாவையுறுப்பு 3, எனவிவை, இவற்றின் றன்மை செயிற்றியமும், சந்தமும், பொய்கை யார் நூலும் முதலியவற்றுட் காண்க.”

(யாப்பருங்கலம், ஒழிபியல், "மாலை மாற்றே" என்னும் சூத்திர உரை)

அடியார்க்கு நல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரையில், செயிற்றிய நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு:

'அறமுத னான்கு மொன்பான் சுவையு

முறைமுன் நாடக முன்னோ னாகும்’

1