உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் நூல்கள்

1. அகத்தியம்

அகத்திய முனிவர் தமது பெயரால் அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் என்பர். அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தைக் கூறும் நூல் என்பர்.

“நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்திய முதலாவுள்ள

தொன்னூல்களு மிறந்தன.

என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் கூறுகிறார். அகத்தியம் அக்காலத்திலேயே மறைந்து விட்டது. 2. இராஜஇராஜேசுவர நாடகம்

இப்பெயருள்ள நாடகநூல் ஒன்று இருந்ததென்பதைக் தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுச் சாசனத்தினால் அறிகிறோம். கி.பி. 985 முதல் 1014 வரையில் அரசாண்ட இராசராசன் என்னும் சோழ அரசனைப் பற்றிய நாடகம் இது.'

தஞ்சைப் பருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்ற வைகாசித் திருவிழாவில் இந்த நாடகம் நடிக்கப் பட்டது. இந்த நாடகத்தை நடித்தவர் பெயர், விசயராசேந் திர ஆசாரியன் என்னும் சிறப்புப் பெயரையுடைய சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றன் என்பவர். இவருக்கு ஆண்டுதோறும் ஆடவல்லான் என்னும் மரக்காலினால் நூற்றிருபது கலம் நெல் அளிக்கப்பட்டது. இந்த நாடக நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. ஆனால், இந்த நாடகத்தை நடித்த திருவாலன் திருமுதுகுன்றன் என்பவரே இதனை இயற்றியிருத்தல் கூடும். இவருக்குரிய வீரராசேந்திர ஆசாரியன் என்னும் சிறப்புப் பெயரினாலும் இது உறுதியாகிறது. பண்டைக் காலத்தில் நாடகத்தை நடிப்பவரே நாடகநூலை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தனர்.

இந்த நாடகத்தைப் பற்றிய சாசனம் இது: