உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டன என்பது உண்மையே. ஆனால், எந்தெந்த நூல்களை யார் யார் முதன் முதலாக அச்சிட்டார்கள்: ஒரு நூலின் முதற்பதிப்பு எந்த ஆண்டில் வெளிவந்தது என்பது பற்றி முறையாக ஏழுதிவைக்கப்பட்ட குறிப்பாவது வரலாறாவது கிடையா. அச்சிடப்பட்ட அந்த நூல்களின் முதற்பதிப்புகள் புத்தக சாலைகளில் சேமித்து வைக்கப்படவில்லை. பழைய அச்சுப் புத்தகங்களைச் சேமித்துப் போற்றி வைக்கும் பழக்கம் நம்மவர்களிடம் இல்லை. அக்காலத்தில் பாடப் புத்தகங்கள் சில 10,000 பிரதிகளும் அச்சிடப் பட்டன. ஆனால், விற்பனை ஆகாத பல நூல்கள் 200 பிரதிகளுக்கு அதிகமாக அச்சிடப்படவில்லை.

எனது வீட்டில் என்னுடைய முன்னோர் காலணாவிலையுள்ள சிறிய புத்தகம் முதலாக அதிக விலையுள்ள பெரிய புத்தகம் ஈறாகப் பல அச்சுப் புத்தகங்களை வாங்கிச் சேமித்து வைத்திருந்தார்கள். அத்தொகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட பல அச்சுப் புத்தகங்கள் இருந்தன. ஏட்டுச் சுவடிகளும் பலவகை எழுத்தாணி களும் இருந்தன. சின்னஞ்சிறு வயதில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், (நான், 1900-ஆண்டில் பிறந்தவன்.) நான் கண்டிருக் கிறேன். அந்த நூல்கள் எல்லாம் என் கைக்கு வந்தபோது, நான் விவரம் அறியாதவனாக இருந்தபடியால், அந்நூல்களைக் கேட்கிற வர்களுக்குக் கடனாகக் கொடுத்துத் திரும்பக் கொடுக்கப்படாமல் அவற்றை இழந்தேன்.

அதன் பிறகு முப்பது ஆண்டுகளுக்குமுன் 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்களை ஒரு நண்பர் தொகுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவரிடத்தில் பல பழைய அச்சுப் பிரதிகள் இருந்தன. அந்தக் காலத்தில், 19-ஆம் நூற்றாண்டின் இலக்கிய வரலாறு எழுதவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. இவ்வெண்ணம் அப்போது தோன்றியிருக்கு மானால், 19-ஆம் நூற்றாண்டில் இலக்கிய வரலாற்றினை இன்னும் எவ்வளவோ, சிறப்பாக எழுதியிருக்க முடியும். இந்த நூலை எழுதவேண்டும் என்னும் எண்ணம் அண்மைக் காலத்தில்தான் எனக்கு உண்டாயிற்று. பழைய அச்சுப் பிரதிகளைத் தொகுத்து வைத்திருந்த நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவர் காலமானவுடனே, அவருடைய ஒரே மகன், அப்புத்தகங்களின்