உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

24. விளக்கத்தார் கூத்து

விளக்கத்தார் கூத்து என்னும் நாடகத்தமிழ் நூலை பேராசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல்.

“சேரி மொழியாற் செவ்வி திற்கிளந்

தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே

என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர் இவ்வாறு உரை எழுதுகிறார்:-

“சேரிமொழி என்பது பாடிமாற்றங்கள், அவற்றானே செவ்வி தாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலன் என்று சொல்லுவர் புலனுணர்ந்தோர் என்றவாறு. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டு கொள்க.

இதனால், விளக்கத்தார் என்னும் புலவர் கூத்து நூல் ஒன்று செய்தார் என்பது தெரிகிறது.

இந்த விளக்கத்தார் என்பவர் விளக்கத்தனார் என்றும் கூறப் படுகிறார். இவர் செய்த “கெடலரு மாமுனிவர்” என்று தொடங்கும் கலிப்பாச் செய்யுளை இளம்பூரண அடிகளும் பேராசிரியரும் தமது உரைகளில் மேற்கோள்காட்டுகிறார்கள். ஆனால், இச்செய்யுளை இயற்றிய ஆசிரியர் யார் என்று இவர்கள் கூறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்தச் செய்யுளை 30ஆம் சூத்திரவுரையில் மேற்கோள் காட்டி 40ஆம் சூத்திரவுரையில் இதனைப் பாடியவர் விளக்குகின்றார் என்று கூறுகிறார். அவர் எழுதுவது.

“அஃதேயெனில், விளக்கத்தனார் பாடிய கெடலரு மாமுனிவர். என்னும் கலிப்பா புறநிலை வாழ்த்தாய் வந்தது பிறவெனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தான் வந்தமையாற் குற்றமின்றெனக் கொள்க.

இதனால், விளக்கத்தார் கூத்து என்னும் நூலை இயற்றியவரும், கெடலருமா முனிவர் என்னும் தொடக்கத்துப் பெருந்தேவபாணிச் செய்யுளை இயற்றியவரும் விளக்கத்தனார் என்னும் புலவர் என்பது தெரிகிறது. கெடலருமா முனிவர் எனத் தொடங்கும் அழகிய பெருந் தேவபாணிச் செய்யுள், இவர் இயற்றிய கூத்த நூலின் ஒரு செய்யுள்