உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

'இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடு மெனின், அவைகள்தாம் அகத்துள்ளும் பிற்சான்றோர் செய்யு ளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்டது மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமும் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடா வென்பது.'

(தொல்., பொருள்., உவமை, 37, பேராசிரியர் உரை)

யாப்பருங்கல உரையாசிரியர் கூறுவதாவது:

66

"சீருந் தளையுஞ் சிதைந்து செய்யுள் அழிய நிற்பதன்றாயினும், விளி முதலியவற்றுள் அளபெழுந்து செய்யுளிடத்தும் வந்து அவ்வாறே சொல்லப்படும் என்னும் கருத்தினானே அகத்தியனார் அறுவகை யானந்த ஓத்தினுள் இதனை,

'இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே யிடியற்பா டில்லா வெழுத் தானந்தம்’

என்றார் என்க.

و,

(யாப்பருங்கலம், எழுத்தோத்து, விருத்தியுரை)

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் அகத்தியர் செய்யுளில் னந்தக் குற்றம் என்னும் இலக்கணத்தைக் கூறவில்லை என்று எழுதுகிறார்கள். யாப்பருங்கல உரையாசிரியர், அகத்தியர் ‘ஆனந்த ஓத்து' என்னும் இலக்கணம் செய்துள்ளார் என்று கூறி, ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார். இது குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால், பிற்காலத்திலே அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.

அகத்தியர் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களைக் கீழே தருகிறோம் :

“மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும்

முற்றி நிற்பது முற்றியன் மொழியே.

(தொல்., சொல்., வேற்றுமையியல், 63,

தெய்வச் சிலையார் உரை மேற்கோள்)