உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

235

இதனால் கவிமயக்கறை என்னும் நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

10. காக்கைபாடினியம்

காக்கைபாடினியார் என்பவர் இயற்றியது இந்நூல் இவருக்குப் பிற்காலத்தில் இவர் பெயரையுடைய மற்றொரு புலவர் தம் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அவருக்குச் சிறு என்னும் அடைமொழி கொடுத்துச் சிறுகாக்கைபாடினியார் என்றும், அவரது நூலுக்குச் சிறுகாக்கைபாடினியம் என்றும் பெயர் வழங்கினார்கள்.

5

காக்கைபாடினியார் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர் என்பதையும், தொல்காப்பியர் விரித்துரைத்த இலக்கணத்தைக் காக்கை பாடினியார் தொகுத்து இயற்றினார் என்பதையும், யாப்பருங்கல விருத்தி யுரைகாரார் மேற்கோள் காட்டிய கீழ்காணும் வெண்பாவினால் அறியலாம் : தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலுட் டொகுத்து.

உரையாசிரியர் இளம்பூரண அடிகள், தொல்காப்பிய (செய்யுளியல், 4ஆம் சூத்திரம்) உரையில் கீழ்வருமாறு எழுதுகிறார்.

66

'அஃதேல் நேர்பசை நிரைபசை யெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை யிரண்டசையாக்கி யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தராது, வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற் றியற்சீரைத் தேமா புளிமா என்னு முதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகர வீற்றா னுதாரணங் காட்டினமையானும், சீரும் தளையுங் கெடு வழிக் குற்றியலுகரம் அலகு பெறாதென்றமையானும், வெண்பா வீற்றிலு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமெனவுடன் பட்டமை யானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க.

காக்கைபாடினியத்தைப் பற்றி யாப்பருங்கல விருத்தியுரைகாரர்

இவ்வாறு எழுதுகிறார்: